AR Rahman's daughter's wedding reception: ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.! மகன்,மகளோடு கலந்துகொண்ட ஷாலினி!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகை ஷாலினி மற்றும் அவரது மகன் மற்றும் மகள் கலந்து கொண்ட புகைப்படங்களை, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Continues below advertisement

திருமண வரவேற்பு நிகழ்ச்சி:

Continues below advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மூத்த மகளான  கதீஜாவுக்கும், இசை கலைஞர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் மிக நெருக்கமானவர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஷாலினி -மகள், மகன்:

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் மனைவியும், நடிகையுமான ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் பங்கேற்றனர். அவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 



அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி:

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் பலரும் அஜித் குடும்பத்தினரின் புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Continues below advertisement