பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சுவாரசிய முடிவை எடுத்து இருக்கிறார். 


ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து  ‘பம்பாய்’ ‘காதலன்’  ‘அலைபாயுதே’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ஹாலிவுட் வரை சென்று  ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார். அண்மையில் இவரது இசையில் அண்மையில் வெளியான கோப்ரா, இரவின் நிழல் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


 







தற்போது அவர் மணிரதனம் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இன்று படத்தில் இருந்து முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி இந்தப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்த பத்து நாட்களுக்கு ஒரு புதிய முயற்சியை எடுத்து இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


 










அந்தப்பதிவில், “அடுத்த 10 நாட்களுக்கு நான் சைவ உணவுக்கு மாறுகிறேன்” என்று பதிவிட்டு, தனது உணவையும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.