தந்தையும் இல்லை... தாயும் இறந்துவிட்டார்: தஞ்சையில் துக்கத்தில் மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஈஸ்வரியின் வீட்டிலிருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியுள்ளது. பல வீடுகள் தாண்டியும் இந்த துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடன் அவர்கள் மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு இன்று தகவல் தெரிவித்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தாய் உயிரிழந்ததால் அந்த துக்கத்தில் மகனும் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement

தஞ்சாவூர் முனிசிபல் காலனி ஒன்பதாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மதனகோபால். 17 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவரது  மனைவி ஈஸ்வரி (59). இவர்களது மகன் ராகுல் (29). பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, சொந்தமாக விவசாய பண்ணை மற்றும் சொந்தமாக தொழில் செய்து வந்தார்.

மதனகோபால் 17 ஆண்டுகளுக்கு முன்பு காலமானதால், ஈஸ்வரியும், ராகுலும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். ஈஸ்வரிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் தனது மகன் ராகுலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஈஸ்வரி மணப்பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் 4 நாட்களாக இவர்களின் வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டுக் கிடந்ததுள்ளது. வாசலில் தினசரி பேப்பர்கள், பால் ஆகியவை எடுக்கப்படவில்லை. தினமும் காலையில் ஈஸ்வரி வீட்டில் இருந்து வந்து செல்வார். அதுவும் இல்லாமல் இருந்துள்ளது.

மேலும் ஈஸ்வரியின் வீட்டிலிருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியுள்ளது. பல வீடுகள் தாண்டியும் இந்த துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடன் அவர்கள் மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு இன்று தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவக்கல்லூரி போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டை தட்டிப்பார்த்தும் எவ்வித பதிலும் வரவில்லை. வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளனர். அந்த கதவும் அடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல்கள் என அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் வலுத்த நிலையில் போலீசார் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, ஈஸ்வரி தரையிலும், ராகுல் தூக்கு மாட்டிய நிலையிலும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் ஈஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசத் தொடங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வீட்டில் ரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் எவ்வித பொருட்களும் கலைக்கப்படவில்லை.

வீட்டை போலீசார் சோதனையிட்டபோது ராகுல் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில் நான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, கழிப்பறையில் எனது அம்மா மயங்கி விழுந்து இறந்து கிடந்ததார். ஏற்கெனவே எனது தந்தை இறந்த நிலையில், தற்போது தாயும் உயிரிழந்துவிட்டதால், துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

தடயவியல் நிபுணர்கள் வீடு முழுவதும் ஆய்வு செய்தபோது, வெளி நபர்கள் வந்ததற்கான எவ்வித தடயம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இக்கடிதத்தை ராகுல் எழுதி வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார்கருதுகின்றனர். தனது தாயின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்துள்ளார் ராகுல் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து ஈஸ்வரி, ராகுலின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாய் இறந்த துக்கத்தில் ராகுலும் தூக்கு மாட்டி இறந்த சம்பவம் தஞ்சை நகர்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola