ஏ.ஆர் ரஹ்மான்


இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கும் ஃபுல்ஸ்டாப் வைக்க முடிவு செய்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த தம்பதி தங்கள் 30ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாட இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட கணிசமான மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு இருந்தபோதிலும், பிரிவது என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்." என குறிப்பிடப் பட்டுள்ளது. 


ரஹ்மான் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளன. அப்படி ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பார்க்கலாம்


ஹனிமூனில் ரஹ்மான் என்ன செய்தார்


நடிகர் ரஹ்மானின் தங்கையை தான் ஏ.ஆர் ரஹ்மான் திருமணம் செய்துகொண்டார். ம நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஹ்மான் இப்படி கூறினார் " திருமணம் முடிந்து ரஹ்மான் ஹனிமூன் சென்றிருந்தார். அப்போது நள்ளிரவு ஒரு 12 மணி இருக்கும். நான் என் தங்கைக்கு ஃபோன் செய்தேன். தூக்கத்தில் இருந்த தங்கையிடம் ரஹ்மான் என்ன செய்கிறார் என்று கேட்டபோது அவர் பக்கது அறையில் வீணை வாசித்து இசையமைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவர் அந்த மாதிரியான ஒரு மனிதர் தான். அவருக்கும் எனக்கு வட துருவத்திற்கு தென் துருவத்திற்குமான அளவு வித்தியாசம் இருக்கும். மற்றவர்களை பற்றிய கிசுகிசுக்களைப்  பேச அவர் விரும்பமாட்டார். எப்போது தனியாக இருக்கவே விரும்புவார். அதே நேரத்தில் அவர் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அதே நேரத்தில் நான் அவருக்கு நேரெதிரானவன். எனக்கு நிறைய பேச பிடிக்கும்' என நடிகர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 


ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.