இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் பிறந்தநாள் இன்று. ஸ்டீரியோவில் பயணித்த இசை பயணத்தை டிஜிட்டலுக்கு மாற்றிய இசை இமயம். பலர், ரஹ்மானை பற்றிய பர்சனல் விசயங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அவர் பொதுவெளியில் மிக குறைந்த அளவில் வெளிவருபவர்; கருத்துக்களை பகிர்பவர். அவ்வாறு சமீபத்தில் அவர் பகிர்ந்த தன்னைப்பற்றி சில தகவல்கள், சுவாரஸ்யமாக இருந்தன. இதோ அவற்றை தொகுத்து வழங்குகிறது ஏபிபி நாடு. 


 



மனைவியுடன் ரஹ்மான்


‛‛முதலில் சிறிதாக தான் முடி வைத்திருந்தேன். தாய் மண்ணே மியூசிக் போது, பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்  என இயக்குனர் சொன்னார் அதனால் வளர்த்தேன். கொஞ்சம் வருடம் கழித்து, முடிவை வெட்டிவிடுங்கள் என மனைவி கூறினார். வீட்டில் சொன்னால் கேட்க வேண்டும், அதனால் முடிவை வெட்டி விட்டேன். 


நான் வந்த 80ஸ் காலத்தில் ஒரு மியூசிக் டைரக்டர் 30, 40 படங்கள் செய்து கொண்டிருந்தார்கள். நான் 6 படம் செய்வதே கஷ்டமா இருந்தது. அப்போ புல் ஆர்கஸ்ட்ரா இருப்பாங்க; எஸ்பிபி, ஜேசுதாஸ் அவர்களாக வந்து பாடி செல்வார்கள். ஏன் இவ்வளவு அவசரமாக செயல்பட வேண்டும் என்று யோசித்தேன். பொறுமையாக வேலை செய்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன். 


 



ரிலாக்ஸ் ஏ.ஆர்.ரஹ்மான்


தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு போறோம், இந்தியாவிலிருந்து உலகத்திற்கு போறோம் என்பதால், அதற்கு ஏற்றார் போல்  என்னை மாற்றிக் கொண்டேன். நான் அமைதியாக இருக்க காரணம், பிறவற்றை கவனிக்கத்தான். அமைதியாக இருந்தால்தான், அவை காதில் விழும். காலை 7 மணிக்கு உறங்கி, மதியம் 2 மணிக்கு எழுவேன். இதுதான் என் வாழ்க்கை சுழற்சி. சில நாட்களில் ஒரு மணிநேரம் தான் தூங்குவேன். அது வேலையை பொருத்தது.


சிறு வயதில் எனக்கு போட்டோகிராபி மீது அதிக ஆர்வம் இருந்தது. என்னிடம் நிறைய கேமரா கலெக்ஷன் இருக்கு. அடிக்கடி எனக்கு போர் அடிக்கும். அப்போது தான், புதிதாக ஏதாவது தோன்றும். புது பாடல் போடலாமா, கதை எழுதலாமா என்றெல்லாம் தோன்றும். என்னோட வாழ்க்கை, வெளி உலகை பார்க்காதது. வீட்டுக்குள்ளே தான் வேலை. ஏர்போர்ட், வீடு இதை தவிர வேறு எங்கும் சென்றதில்லை. அது இயற்கையாகவே அமைந்துவிட்டது. 


 



இசை கேட்கும் ஏ.ஆர்.ரஹ்மான்


எனக்கு ஒரே ஒரு விசயத்தில் தான் பயம். எனக்கு நெருக்கமானவர்கள் இறக்கும் போது, அது எனக்கு ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தும். அது சிறுவயதில் இருந்தே இருந்தது. ஒரு இசையமைப்பாளர், அனைத்தையும் காதலிப்பார். அந்த காதலை, கடவுள் மீது வைக்கும் போது அது இன்னும் நம்மை மேம்படுத்தும். அம்மா இருந்த போது, அவரை சந்திப்பதே மதிய உணவோடு கூடிய சந்திப்பாக இருக்கும். என் மனைவியும் அதை உணர்ந்தார். அவர் என்னை அனுமதித்தார். அம்மாவின் உணவு அவ்வளவு இணக்கமானது.


தமிழ் எனக்கு கஷ்டமான பாடம். எனக்கு இலக்கணம் சரிவர வராது. பின்னர் தமிழில் பாடல்கள் எழுத கற்றுக்கொண்டேன். கவிஞர்களுடன் இணைந்து தமிழை கற்றுக்கொண்டேன். எனக்கு கோபம் அதிகம் வரும். என் அணியினருக்கு அது தெரியும். திட்டமிட்டது நடைபெற சில நேரம் கோபம் வருவதை தவிர்க்க முடியாது. 


திரைக்கு பின்னால் இருப்பதையே நான் விரும்புகிறேன். திரையில் தோன்றுவதை நான் விரும்பவில்லை. இசை நிகழ்ச்சிகளில் தோன்றுவதை தவிர, வேறு தோன்றல் தேவையில்லை என நினைக்கிறேன். வீட்டுக்கு அருகிலேயே ஸ்டூடியோ இருப்பதால், என் குடும்பத்தை நான் மிஸ் செய்ய நேர்ந்ததில்லை. என் இசையை, ரசிகர்கள் கேட்ட பிறகு தான் என் குடும்பத்தார் கேட்பார்கள். அவ்வப்போது என் மனைவியுடன் பைக் ரைடு சென்றிருக்கிறேன். 


 



ஸ்டைலிஸ் ஏ.ஆர்.ரஹ்மான்


எலக்ட்ரானிக் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் ஆசை இருந்தது. அது தான் நோக்கமாகவும், குறிக்கோளாகவும் இருந்தது. ஆனால், அது இசையாக மாறும் என நானே நினைத்ததில்லை., இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் சன் தொலைக்காட்சியில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


அந்த பேட்டியின் போது, நெறியாளர் முன் வைத்த கேள்விகளில் முக்கியமான ஒன்று, உங்கள் பாடல் சிலவற்றை யாருக்காக டெடிக்கேட் செய்வீர்கள் என்பது. அதற்கு அவர் டெடிகேட் செய்த பாடல்கள் இதோ...


அம்மா-தாய் மண்ணே வணக்கம்


மனைவி- ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி


ரசிகர்கள்- 99 படத்தில் அனைத்து பாடல்களும்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண