காதலிக்க நேரமில்லை பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அனிருத்துக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
காதலிக்க நேரமில்லை:
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேது வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இயக்குனரான கிருத்திகா உதயநிதி, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு காளி, பேப்பர் ராக்கெட் போன்ற வெப் தொடர்களையும் இயக்கியிருந்தார்.
ஹிட் அடித்த பாடல்கள்:
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் ”என்னை இழுக்குதடி” லாவண்டர் நிறமே பாடல்கள் எல்லாம் எற்கெனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டிரெய்லர் வெளியீட்டு விழா:
இந்த நிலையில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று( ஜனவரி 7) வெளியானது, ஜெயம் ரவியை டிரெய்லரில் பார்த்த ரசிகர்கள் எங்கேயும் எப்போதும், இதயத் திருடன், தாம் தூம் போன்ற படங்களில் நடித்த சாக்லெட் பாய் ஜெயம் ரவியை திரும்ப பார்த்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Toxic: வெளியானது கேஜிஎஃப் நாயகன் யாஷ்ஷின் டாக்சிக் பட டீசர் - ஸ்டைலிஷான லுக், மிரட்டலான மேக்கிங்
அனிருத்துக்கு அட்வைஸ்:
டிரெய்லர் விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளார் அனிருத்துக்கு அட்வைஸ் வழங்கினார். இது குறித்து பேசிய ஏ.ஆர் ரகுமான் ”அனிருத் இப்போ நல்லா இசை அமைக்கிறார், பெரிய படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுப்பது என்பது சாதரண விஷயம் கிடையாது. அப்போது எல்லாம் 10 இசையமைப்பாளர்கள் தான் இருந்தார்கள். இப்போ 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதற்குள் அனிருத் தனித்து நிற்கிறார். திறமை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
மேலும் பேசிய ரகுமான், அனிருத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோள் நீங்க இன்னும் அதிகமாக கிளாசிக்கல் இசையை கற்றுக்கொண்டு, கிளாசிக்கல் இசையில் பாடல்கள் இசையமைக்க வேண்டும். அப்போது தான் சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க முடியும். நீங்கள் கிளாசிக்கள் இசையை அதிகம் பயன்படுத்தினால் அது அடுத்த தலைமுறையினருக்கு சுலபமாக சென்று சேரும் என்று ரகுமான் பேசினார்