Toxic: கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
”டாக்சிக்” ஃபர்ஸ்ட் லுக்
கேஜிஎஃப் படத்தின் மூலம், இந்தியாவை தாண்டு உலகம் முழுவதும் யாஷ் பிரபலமாகியுள்ளார். அப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, சிறிது காலம் ஓய்விற்குப் பிறகு கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ”டாக்சிக்” எனும் படத்தில் யாஷ் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவில்,“ காரிலிருந்து இறங்கும் யாஷ் ஒரு வெள்ளை உடை மற்றும் தொப்பிய அணிந்து, ஒரு சுருட்டைப் பிடித்தபடி, மிரட்டலான தோற்றத்தில் மெதுவாக நடந்தபடி, இரவு நேர மதுபான விடுதிக்குள் செல்வதை போல” காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை கொண்டாடி வரும் ரசிகர்கள், 'ராக்கி பாய் இங்கே இருக்கிறார், ராக்கி பாய் அர்ரைவல்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
களமிறங்கிய நட்சத்திர பட்டாளம்:
கேவிஎன் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படம், வரும் ஏப்ரல் 10ம் தேதியன்று வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முழுமையடையாததால் வெளியீடு தாமதமாகலாம் என கருதப்படுகிறது. படத்தில் நடிக்கும் முழு நடிகர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த, அக்ஷய் ஓப்ராய் இந்த படத்தில் இணைந்துள்ளார். தமிழில் நளதமயந்தி படத்தில் கீது மோகன் தாஸ், டாக்சிக் படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே, மூத்தோன், பொய்யர் பகடை , மூத்தவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் கே நாராயணா மற்றும் யாஷ் தயாரித்துள்ளனர். டாக்சிக் படத்தை தொடர்ந்து, நித்தேஷ் திவாரியின் ராமாயணத்தில் ராவணனாக யஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதா தேவியாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது