பாலிவுட்டின் எவர்கிரீன் ஹிட் படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள படம் ஆமீர் கான் நடிப்பில் 2001-ஆம் ஆண்டில் வெளியான லகான். பாக்ஸ் ஆபிஸில்  ரூபாய் 659.7 மில்லியன் வரை கலெக்‌ஷனில் அள்ளிக்குவித்த படத்தின் 20-வது ஆண்டு இது. இதைக் கொண்டாடும் விதமாக லகான் கூட்டணி ஆன்லைனில் இன்று ஒன்று கூடியது. சுவதேஷ், ஜோதா அக்பர் உள்ளிட்ட பிரமாண்டங்களை இயக்கிய அஷுதோஷ் கவ்ரிகர் இயக்கிய படம். 1893ல் கிரிக்கெட் என்பதுதான் கதை. பயிற்சியில் சிறந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்து கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத இந்திய மண்ணைச் சேர்ந்த அணி விளையாடுகிறது. இவர்கள் ஜெயிப்பார்களா? எப்படி ஜெயிப்பார்கள் என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த பின்னணி இசையும் பாடல்களும் இன்றளவும் ப்ளேலிஸ்டில் டாப் ரகம். 








லகான் அணி ஆன்லைனில் ஒன்று கூடியதைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆமீர் கான், இயக்குநர் அஷுதோஷ் கவ்ரிகர், படத்தின் இதர நடிகர்களான ரேசி ஷெல்லி, பால் ப்ளாக் தார்ன், சுஹாசினி மூலே, ப்ரதீப் சிங் ராவத் ஆகியோரும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்றனர். இதுகுறித்துத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான் ‘உணர்வுப்பூர்வமான பெருமைமிக்க அணி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.  


Also Read: "கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!