புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 


நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் நடிகர் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை மீட்ட அவரோட உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக பாராட்டு விழா நடத்தப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.


முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவராக இருந்த விஜயகாந்தை தொடர்ந்து, சரத்குமார் பல ஆண்டுகளாக தலைவராக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்  நடிகர் சங்கத்திற்கான இடத்தில் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி களமிறங்கிய நாசர் தலைமையிலான விஷால் அணி வெற்றி பெற்றது. 


அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல் செங்கல் எடுத்து கொடுக்க கோலகலமாக நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் ஆண்டுகள் ஆனதே தவிர இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. இதனிடையே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வழக்கால் பணிகள் பாதிக்கப்பட்டன. 


கடந்தாண்டு நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்குகள் எண்ணப்பட்டு மீண்டும் விஷால் அணி வெற்றி பெற்றது. இதன்பின்னர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6 வது செயற்குழு கூட்டம் சென்னையில்  ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில்  நடிகர் சங்க கட்டிடப்பணிகள் 40% மீதமுள்ளது. அதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை.எனவே வங்கியில் கடன் பெற முடிவு செய்யப்பட்டது. மேலும் நடிகர், நடிகைகளிடமுடம் நிதி திரட்டி இன்னும் 3 மாதங்களுக்குள் கட்டிட வேலையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.