முதல் படத்திற்கு புதிய பாதை என்று டைட்டில் வைத்ததாலோ என்னவோ, எப்போதும் புதிய புதிய பாதைகளை கண்டறிந்து அதில் பயணம் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர், இயக்குனர் பார்த்திபன். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷன்களை குவித்து வருகிறது. விமர்சகர்களுடன் ஏற்பட பல மோதல்களுக்கு மத்தியில் படம் பெரும் விளம்பரம் பெற இன்னும் நன்றாகவே ஓடியது என்று சொல்லலாம். 



திரைப்படத்தை சூழ்ந்த சர்ச்சைகள்


இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று சில பெண்கள் நடித்திருந்தனர். அதில் சில நிர்வாணக் காட்சிகளும் வருகின்றன. இந்த காட்சிகளில் நடித்த பெண்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீதும் கடந்த வாரம் வெளிச்சம் விழுந்தது. அவரை நடிகை ரேகா நாயர் திருவான்மியூர் பீச்சில் அடிக்க சென்றது, அதற்கு விளக்கம் கொடுத்தது என திரைப்படம், விமர்சனம் என்பதை தாண்டி தனிமனித தாக்குதல்களாக வெளி உலகில் கவனம் பெற்று, எப்போதும் பேசு பொருளாகவே இருந்தது.


தொடர்புடைய செய்திகள்: AK 61: பேங்க் செட்.. துப்பாக்கி ஏந்திநிற்கும் போலீஸ்.. பரபரக்கும் படப்பிடிப்பு.. AK61 வீடியோ வைரல்..!


பவி டீச்சர் எமோஷனல்


இதனிடையே இந்த படத்தை உலக அரங்கில் எடுத்து செல்லும் முயற்சியில் எதையும் மறைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து எவ்வளவு ராவாக சினிமாவை அணுக முடியுமோ அவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருந்தார் பார்த்திபன். இந்த படத்தின் ஏ ஆர் ரகுமானின் இசை பெரிதும் போற்றப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரிடமும் பட மேக்கிங் அனுபவம் குறித்து கேட்கவே பல நேர்காணல்கள் குவிந்து இருந்தன. அவர்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகை பிரிகிடா ரசிகர்களால் செல்லமாக பவி டீச்சர் என்று அழைக்கப் படுபவர் ஒரு நேர்காணலில் பார்த்திபன் குறித்து மிகவும் எமோஷனலாக பேசினார். 



வாழ்க்கையை அர்ப்பணிச்சுருக்கார்


அவர் பேசுகையில், "சாருக்கு இந்த ப்ரெஸ்ஷர் மூலமாக ஏதாவது ஆகி விடுமோன்னு எல்லாம் எங்களுக்கு பயமா இருந்தது. ஏன்னா எல்லா பக்கத்துல இருந்தும் ப்ரெஷர் வருது. இந்த மாதிரி ப்ரெஷர் எல்லாம் வேற யாரும் கடந்து வந்திருப்பாங்களான்னே தெரில. எல்லாரும் சொல்லிக்கலாம் சினிமா லவ்வர்ன்னு. ஆனா நிஜமான சினிமா லவ்வர்ன்னா அது அவர்தான். அப்படி தன் வாழ்க்கையையே சினிமாவுக்காக அர்ப்பணிச்சு வாழ்ந்துட்டு இருக்காரு", என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.