தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா, திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு டோலிவுட், கோலிவுட், மாலிவுட், சாண்டல்வுட் என நான்கு மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர்.


இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி அண்மையில் தனது செல்லப் பிராணியான டூட் (Dude) உடன் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டூட் ஒரு அழகான நாய்க்குட்டி. சூட்டிங் இல்லாவிட்டால் அனுஷ்காவின் பொழுது டூடுடன் தான் கழியுமாம். அனுஷ்காவுக்கு டூட் நல்ல பெட்.


ராஜமெளலியின் பாகுபலி வெளியான பின்னர் அனுஷ்கா ஷெட்டி பட்டிதொட்டி வரை பிரபலமாகிவிட்டார். அதனாலேயே அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் ஏராளம். அதுபோல் அனுஷ்கா தன் ரசிகர்களை ஏமாற்றாமல் சோஷியல் மீடியாவில் ஏதாவது பதிவிட்டுக் கொண்டே இருப்பார்.


அப்படித்தான் அண்மையில் டூடன் எடுத்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.






வாழ்த்து சொன்ன நவீன் பொலிஷெட்டி:


அனுஷ்கா தன் திரை வாழ்வில் 17வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் நவீன் பொலிஷெட்டி. இவர் தெலுங்கில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி வகிக்கிறார். அவர் நடிப்பில் வெளியான 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜதிரத்னலு’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.






இப்போது அனுஷ்காவும் நவீனும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அனுஷ்காவின் 17 ஆண்டு திரைப்பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நவீன், தனது சமூக வலைதள பக்கத்தில், அனுஷ்காவுக்கு ஒரு கேக் கொடுத்துள்ளேன். 17 வருடங்களாக எனது பெஸ்ட் கோ ஸ்டார். எங்களது புதிய படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது. அதில் முழுமுழுக்க கொண்டாட்டம் தான் என்று பதிவிட்டுள்ளார். அந்த கேக்கில் இன்ஸ்டஸ்ட்ரீயில் 17 ஆண்டுகள் என்று எழுதப்பட்டுள்ளது.