பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, தனது கணவர், கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


விராட் கோலி, நடப்பு ஐ.பி.எல்.-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்தவகையில், ஐ.பி.எல். போட்டிகளுக்காக அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மும்பையில் தங்கியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கிளென் மேக்ஸ்வேல்- வினி ராமன் அவர்களின் திருமணத்தின் வரவேற்ப்பு நிகழ்ச்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


அனுஷ்கா ஷர்மா, தனது பதிவில், கொரோனா பபுள் ஸ்பேசில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டேன். இந்த கொரோனா காலத்தில் பபுள் லைஃபில் நான் முடிந்தவரை எல்லா திருமண நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டாடி விட்டேன் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.






பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் நிகழ்வுகளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கலந்து கொண்ட புகைப்படம் இண்டர்நெட்டில் ரசிகர்களால் பகிரப்பட்டுவருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண