சன் குடும்ப விழாவில், ஃபேவரைட் ஹீரோயின் விருதுவாங்கிய சுந்தரி சீரியல் நாயகி, தனது கணவருடம் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டதோடு, பதட்டத்தில் உன் பெயரை சொல்ல மறந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.


விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் கேப்ரில்லா செல்லஸ். தனது நகைச்சுவை திறமையின் மூலம் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவரான இவர், வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து டிக்டாக், முகநூல், youtube போன்ற சோசியல் மீடியாக்களில் உணர்ச்சிப்பொங்க கவிதைகளை வாசித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டார் கேப்ரில்லா.



இதனையடுத்து இவருக்கு சன்டிவியின் சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமத்து ஏழைப்பெண்ணாக வலம் வரும் நாயகி சுந்தரி, தன்னுடைய கருமையான நிறத்தினால் படும் கஷ்டம் மற்றும் கணவர் ஏற்படுத்தும் துன்பம் என அத்தனையும் சமாளித்து வருவதுபோன்று கதைக்களம் அமையப்பெற்றிருக்கும். இச்சீரியலை ரசிப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சூழலில் தான்  இந்நிலையில் சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில், கேப்ரில்லா செல்லஸூக்கு ஃபேவரைட் ஹீரோயின் விருது வழங்கப்பட்டது.


மேடையில் விருதுவாங்கிய பிறகு கேப்ரில்லா தனது நடிப்பிற்கும், தான் வாங்கிய விருதுக்கும் அம்மா மற்றும் அம்மாச்சிதான் காரணம் என மேடையில் கண் கலங்கினார். ஆனால் தனது கணவரைப்பற்றி எவ்வித தகவலும் அவர் கொடுக்காத நிலையில் தான் இன்ஸ்டா வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார். “கேப்ரில்லா, தனது இன்ஸ்டா பதிவில், பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல பதட்டத்துல உன் பேர சொல்ல மறந்துட்டேன்“ என கூறியுள்ளார்.






இந்தப் பதிவைப்பார்த்த கேப்ரில்லாவின் கணவர் ஆகாஷ், உண்மையாகவே உன்னுடைய திறமைக்கு அம்மா மற்றும் அம்மாச்சிதானே காரணம். உண்மையை மட்டும் சொல்லு பாப்பா போதும் என தெரிவித்துள்ளார். இணையத்தில் இந்தப் பதிவைப்பார்த்த நெட்டிசன்கள், உங்களது கெமிஸ்டரி தொடரட்டும் எனவும் விருது வாங்கிய சுந்தரி சீரியல் நாயகி கேப்ரில்லாவிற்கு வாழ்த்துக்களையும் பதிவிட்டுவருகின்றனர்.


இதே போன்று விஜய்டிவியிலும் சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடந்தது.  இதில் தமிழும், சரஸ்வதியில் சீரியலில் நடிக்கும் நக்க்ஷத்திரா நாகேஷ் மற்றும் தீபக் இருவருக்கும் சிறந்த ஆன் ஸ்கிரின் ஜோடிக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது தீபக் தனது மனைவியுடனும், நக்ஷ்த்திரா தனது கணவனுடனும் வந்து விருதுகளை வாங்கி மேடையை ஜமாய்த்து விட்டனர்.






அப்போது தனது கணவனுடன் எடுத்த புகைப்படங்களை நக்ஷ்த்திரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து’ இந்த விருதை எனக்கு வழங்க எனது மிகப்பெரிய விருதை மேடையில் கொண்டு வந்ததற்கு விஜய் டெலிவிஷனுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.