தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நடிகை அனுஷ்கா.



  • மங்களூருவை பூர்வீகமாக கொண்ட அனுஷ்கா ஷெட்டி 2005ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.  அதே ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிளாஸ்பஸ்டர் படமான விக்ரமார்குடு படத்திலும் நடித்து இருந்தார். 

  • 2006ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தின் மூலம் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

  • 2009ம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படம் அனுஷ்காவின் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதில், கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தி மிரட்டி இருப்பார் அனுஷ்கா.





  • அதே ஆண்டு பாபு சிவன் இயக்கிய வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். 

  • 2010ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் நடித்த அனுஷ்காவின் ரசிகர்களை கவர்ந்தார். 

  • முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, 2011ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து, தனது அழகால் ரசிகர்களை ஈர்த்து இருப்பார். 

  • 2011ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் வழக்கறிஞராக நடித்த அனுஷ்கா வேறொரு கோணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 

  • 2012ம் ஆண்டு ராதிகா, கார்த்தி நடித்த சகுதி, அதே ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தாண்டவம் படங்களில் ஹீரோயினாக நடித்தார். 

  • அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் -2, இரண்டாம் உலகம், லிங்கா ருத்ரமா தேவி, அடுத்தடுத்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அனுஷ்காவின் நடிப்புக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. 

  • 215ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி அனுஷ்காவை உச்சக்கட்ட நடிகையாக கொண்டாடப்பட்டது. அதில் ராஜ கம்பீரமும், அழகும், வீரமும் காட்டி அசத்தி இருப்பார். இன்றும் தேவசேனாவாக பலரது மனதில் கனவு தேவதையாக அனுஷ்கா வாழ்கிறார். 





  • 2015ம் ஆண்டு ஆரியா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படத்தில் மிகவும் உடல் பருமனான தோற்றத்தில் அனுஷ்கா நடித்து இருப்பார். உடல் பருமனாக இருந்தாலும், அவரின் அழக்குக்கு குறையில்லை என்றே ரசிகர்கள் கொண்டாடினர். 

  • 2016ம் ஆண்டு நாகர்ஜூனாவின் நடிப்பில் வெளிவந்த தோழாவில் சில நிமிடங்களே வந்தாலும் தனது அழகால் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். 





  • அருந்ததி, ருத்ரமா தேவி, பாகுபலி வரிசையில் அனுஷ்காவை முன்னிலைப்படுத்தி 2018ம் ஆண்டு வெளிவந்த பாகமதி அவருக்கு பெரிதாக வெற்றியை தரவில்லை. எனினும், அமானுஷியத்தின் பயத்தை கண் முன் காட்டும் அனுஷ்காவின் நடிப்பு அபாரம் என்றே சொல்ல வைத்தது. 

  • இப்படி நடிப்பில் பன்முகத்தை காட்டிய அனுஷ்கா சினிமா உலகில் 18 ஆண்டுகள் நிறைவு செய்வதை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.