பிரபல திரைப்படத் இயக்குனர் அனுராக் காஷ்யப் நவீன உறவுகளின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார். 


'அக்லி' படத்திற்குப் பிறகு, இயக்குனர் அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஆல்மோஸ்ட் பியார் வித் டி.ஜே. மொஹபத்'. இந்த திரைப்படத்தில் நவீன உறவுகளின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை எழுதுவதை பற்றிய எண்ணம் ஒன்று அவரது மனதில் தோன்றவே அதை தனது மகளுடன் பகிர்ந்துள்ளார். 


 



நீண்ட காலமாகவே பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் இடையில் இருக்கும் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக என்றுமே விரும்பிய அனுராக் காஷ்யப் மகளுடன் நடைபெற்ற உரையாடலின் இறுதியில் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் போராட்டங்களையும் சவால்களையும் ஆராய்ந்து அதை மையமாக வைத்து ஒரு படம் உருவாக்குவது முக்கியமான ஒன்றாக எண்ணி அதை பற்றி கதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். 


 







'பிளாக் ஃப்ரைடே', 'அக்லி', 'பாம்பே வெல்வெட்', 'கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர்', 'டோபரா' போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் அனுராக் காஷ்யப் இவற்றை மனதில் வைத்து தான் ஷெல்லி மற்றும் அமித் திரிவேதியின் உதவியுடன் வேடிக்கையான ரொமான்டிக் காதல் கதைகளை எழுதியதை தெடர்ந்து கரண் மாற்றும் அலயா உடன் இணைந்து இன்றைய தலையுறையினருக்கு ஏற்ற இப்படத்தை உருவாக்கி முன்னேறினோம். நீண்ட காலமாக இந்த ஸ்க்ரிப்டை உருவாக்கி வரும் இயக்குனர் 'அக்லி' படத்திற்கு பிறகு இந்த கதையை உருவாக்கி வருகிறார். 


 






 


இன்றைய இளைஞர்கள் அவர்களை பற்றி அறிந்து கொண்டு அவர்களுக்குள் இருக்கும் அன்பை பற்றி தெரிந்து கொள்வதை பற்றியும் முந்தைய தலைமுறையினர் இது பற்றி தெரிந்து கொள்ள விரும்பாததை  பற்றியும் இப்படம் முழுமையாக சித்தரிக்கும் என கூறுகிறார் இயக்குனர் அனுராக் காஷ்யப். 


  
'ஆல்மோஸ்ட் பியார் வித் டி.ஜே. மொஹபத்' திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார்கள் நடிகர் கரண் மேத்தா  மற்றும் 'ஃப்ரெடி' நடிகை அலயா எஃப் நடித்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட் பேட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.