பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யபின் மகள் ஆலியா கஷ்யபின் திருமண நிச்சயம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனுராக்கின் முன்னாள் மனைவியான கல்கி கோச்லின் தனது கணவர் மற்றும் மகளுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
அனுராக் கஷ்யப் (Anurag Kasyap)
கேங்ஸ் ஆஃப் வாஸீப்பூ (Gangs Of Wasseyppur ), அக்லி (Ugly), மன்மர்சியான் (Manmarziyan), தேவ் டி (Dev d) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப். தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் அவர். தனது படங்களுக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இந்திய இயக்குநர்களில் முக்கியமானவர் அனுராக். மேலும் சமீப காலமாக தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்தும் வருகிறார். தமிழ் சினிமாக்களின் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அவர் இதை செய்கிறார். அண்மையில் தனது மகள் ஆலியா கஷ்யபின் திருமண நிச்சயத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் அனுராக்.
முறிந்த உறவுகள்
ஆர்த்தி பஜாஜ் என்பவரை 1997-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அனுராக். ஆனால் இருவருக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2009 தங்களது திருமண உறவை முடித்துக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு தான் இயக்கியப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கல்கி கோச்லீனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த உறவும் வெகு நாள் நீடிக்காமல் சில வருடங்களில் முறிந்தது. தற்போது தனது மகள் ஆலியா கஷ்யபின் திருமன நிச்சயத்தின்போது தனது முன்னால் மனைவியான கல்கியை அழைத்திருந்தார் அனுராக். தனது கணவர் மற்றும் மகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கல்கி கோச்லீன். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
கென்னடி
தற்போது சன்னி லியோனை வைத்து கென்னடி என்கிற படத்தை இயக்கியுள்ளார் அனுராக். மேலும் தமிழி, குரங்கு பொம்மை படத்தை ஆகிய படங்களை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் அனுராக் கஷ்யப்.