லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 93 வது அகாடமி விருதுகளில் "அந்தோனி ஹாப்கின்ஸ்" சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார்.




பிரெஞ்சு நாவலாசிரியரும் நாடக இயக்குநருமான "ஃப்ளோரியன் ஜெல்லர் "இயக்கிய தி ஃபாதர் திரைப்படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில்  நடித்ததற்காக 83 வயதான ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை தட்டி சென்றுள்ளார் .


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Joaquin Phoenix presents the Best Leading Actor Academy Award to Anthony Hopkins at the 93rd <a >#Oscars</a> <a >pic.twitter.com/9E1dCnWXpg</a></p>&mdash; Joaquin Phoenix Updates (@jphoenixupdates) <a >April 26, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இது ஹாப்கின்ஸின் இரண்டாவது சிறந்த நடிகரின் வெற்றியாகும் - 1994 ஆம் ஆண்டில் தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸில் ஹன்னிபால் லெக்டராக நடித்ததற்காக அவர் முதல் ஆஸ்கார் விருத்தினைப் பெற்றார் . "தி ரெமெய்ன்ஸ் ஆஃப் தி டே " மற்றும் "நிக்சன் " அவரது முன்னணி கதாபாத்திரங்களுக்காகவும், தி டூ போப்ஸ் மற்றும் அமிஸ்டாட் படத்தில் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் இவர்  பரிந்துரைக்கப்பட்டார்.






இந்நிலையில் ,83 வயதில் ஆஸ்கார் விருதினை பெரும் பழம்பெரும் நடிகர் என்ற சாதனை படைத்துள்ளார் அந்தோணி ஹாப்கின்ஸ்.  இதற்கு முன்பு கிறிஸ்டோபர் பிளம்மர் 82 வயதில் பிகினர்ஸ் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .ஹாப்கின்ஸ் தனது விருதினை நேரில் சென்று பெற்றுக்கொள்ள இயலவில்லை .ஆஸ்கார் வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான நிகழ்வாக இருந்தது . இவர் விருது அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே முடிந்தது.