உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடந்து, இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிலையில், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் உலகம் முழுவதும் மே 20-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளது. ஓடிடி உரிமையை ஜி5 வாங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 11 படத்தின் டீசல் வெளியானது. அதில், போலீஸ் அதிகாரியாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின் “நடுவுல நிக்கிறது இல்ல சார் நியூட்ரல்.. நியாயத்து பக்கம் நிக்குறதுதான் நியூட்ரல்” என பேசும் டையலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ரூபன் செய்கிறார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓகே ஓகே போன்ற காமெடி ஜானரில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், மனிதன், நிமிர், பிசாசு போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆர்டிகிள் படத்தில் உதயநிதி நடித்திருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.