கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஹர்பஜன் சிங், விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக தனது ராஜ்யசபா சம்பளத்தை வழங்குவதாக இன்று அறிவித்தார். ராஜ்யசபா உறுப்பினராக, நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் கூறினார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒரு ராஜ்யசபா உறுப்பினராக, விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக எனது ராஜ்யசபா சம்பளத்தை பங்களிக்க விரும்புகிறேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் இணைந்துள்ளேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்’ எனப் பதிவிட்டுள்ளார்.






ஹர்பஜன் சிங் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ராகவ் சதா, லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக நிறுவனர் அசோக் மிட்டல், ஐஐடி டெல்லி பேராசிரியர் சந்தீப் பதக் மற்றும் தொழிலதிபர் சஞ்சீவ் அரோரா ஆகியோரை மார்ச் 31 ராஜ்யசபா தேர்தலுக்கு  ஆம் ஆத்மி பரிந்துரைத்தது. அனைத்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் 92 இடங்களில் வெற்றி பெற்று அக்கட்சி அமோக வெற்றி பெற்றது.


2021 டிசம்பரில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்தார். ஓய்வு அறிவிப்பதற்கு முன், மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை ஹர்பஜன் சிங் சந்தித்தார். 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இந்தியன் பிரீமியர் லீக் தொட்ரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் எக்ஸ்எல் பஞ்சாப் அணிகளுக்கும் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண