இந்த வாரம் ஓடிடியில் திரையரங்கத்தில் பெரியளவு வெற்றிபெற்ற படங்கள் வெளியாகின்றன. இந்த வார ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ.


அன்னப்பூரணி



 நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் அன்னப்புரணி. கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிய இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்தார். ஜீ ஸ்டுடியோஸ், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்தது. பிராமண வீட்டில் பிறந்த அன்னப்பூரணி மிகபெரிய செஃப் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது லட்சியம் நிறைவேறுகிறதா இல்லையா என்பதே படத்தின் கதை. டிசம்பர் 29 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது அன்னப்பூரணி திரைப்படம். 


பார்க்கிங்




ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியானது. இந்துஜா, எம். எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பேஷன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.  டிசம்பர் 30 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


டைகர் 3




சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்து கடந்த நவம்பர் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் டைகர் 3. ஷாருக் கான் ,ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் கெளரவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது இப்படம்.


மங்களவாரம்




அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான மங்களவாரம் திரைப்படம் கடந்த மாதம் தமிழில் செவ்வாய்கிழமை என்கிற பெயரில் வெளியானது. அஜ்மல் , நந்திதா  ஸ்வேதா, பாயல் ராஜ்புத், சைதன்யா ரவீந்திரா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள்.ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை டிசம்பர் 28 முதல் ஹாட்ஸ்டாரின் பார்க்கலாம்.


12 ஃபெயில்




விது வினோத் சோப்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம் 12th 2ஃபெயில் . மேதா ஷங்கர், விக்ராந்த் மாஸ்ஸி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார், திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. டிசம்பர் 29 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்தப் படத்தை பார்க்கலாம்.