அன்னபூரணி அரசு அம்மாவின் பக்தி சொற்பொழிவை விட, அவர் தொடர்பான தகவல்கள் தான் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தன்னை சாமியராக, அல்லது தானே கடவுளாக, அவதாரமாக, ரட்சகராக என்று எண்ணி பலரும் நான் தான் கடவுள் என்று மக்களை தங்கள் பின்னால் நடமாட செய்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த அன்னபூரணி, நான் தான் ஆதிபராசத்தி என்று உலக மொத்த உருட்டையும் ஒத்த ஆளாக உருட்டி வருகிறார்.
இவரது பழைய கதையும், புதிய கதையும் அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. இப்போது, அதில் வேறு என்ன புது அப்டேட் என, வலிமை அப்டேட்டை விட அதிக எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருப்பது அன்னபூரணி அரசு அம்மாவின் விவகாரத்தில் தான். அப்படிப்பட்ட அப்டேட் தான் இது!
அன்னபூரணி அரசு அம்மா தற்போது அவரது முகப்புத்தகத்தில் ஆன்மிகம் பற்றி கருத்து ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் அவர், ஆன்மிகத்திற்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. சாவையே நேருக்குநேர் சந்தித்து வரவேற்கும் துணிச்சல் கொண்டது ஆன்மிகம். ஆன்மிகம் என்பது பயந்தவனுக்கோ, கோழைகளுக்கானதோ அல்ல. அது மனதையே தூக்கி எறியத்தெரிந்த வீரனுகானது. உயிரையே துச்சமென மதிக்கும் தீரனுக்கானது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு கீழ் அன்னபூரணிக்கு ஆதரவாகும், எதிராகவும் பலரும் பல கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகின்றனர். அதில் ஒரு சில, அண்ணபூரணி அம்மனை போற்றி....
அற்ப பதறுகளை மன்னித்து உலக மக்களை ஆசிர்வதியுங்கள் ...
இவன் ...அண்ணபூரணி அம்மா பேரவை.தென் மாவட்ட மதுரை அலுவலகம் என்றும், இவள் உங்க பேர சொல்லி ஏமாத்தினா மூஞ்சில ஆசிட் அடிச்சி வதம் செஞ்சிடு தாயே என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
அன்னபூரணி அரசு அம்மா மீதான சர்ச்சை ஓயாத நிலையில், இதுவரை அவர் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், கோடிட்ட இடத்தை நிரப்புவது போல், ஆளாளுக்கு தெரிந்ததை, புரிந்ததை எழுதி ஒருவழி செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால், நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அன்னபூரணி அரசு அம்மா, தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்