சமூக வலைதளங்களில் தற்போதைய சென்சேஷனல் அம்மா, ஆதிபராசக்தி என்ற பல்வேறு பெயர்களால் வலம் வரும் அன்னப்பூரணி அரசு தான். எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று சந்தேகித்த சமூகவலைதளவாசிகள், நடந்ததெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த அதே பெண்மணி தான் இந்த அன்னப்பூரணி என்பதை கண்டுபிடித்தனர். இரண்டு நாள்களாக இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இவரை கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் வருகின்றனர். இவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய உள்ளதால் இவர் தலைமறைவானதாக செய்திகள் வெளியானது.




இந்த நிலையில், அன்னப்பூரணி பிகைண்ட் உட்ஸ் நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் எங்கே பிறந்தார் எங்கே வளர்ந்தார் என்று கேட்டபோது, நான் எங்க பிறந்தேன் வளர்ந்தேன்றத சொல்றதுக்காக நான் இங்க பிறவி எடுத்து வரல. 2009ல் நானும் அரசுவும் திருமணம் செஞ்சுகிட்டோம். 2013ல சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்திருந்தோம். நாங்க வந்தத மக்களால புரிஞ்சுக்க முடியாது. அவங்க என்ன கண்ணோட்டத்துல பார்க்குறாங்களோ அந்த கண்ணோட்டத்துல தான் புரிஞ்சிக்க முடியும். அதனால தான் இப்டி பேசுறாங்க. என்றார். நீங்க அருள் வாக்கு குடுப்பீர்களா என்று கேட்டதற்கு  நா எந்த அருள்வாக்கும் சொல்லலை என்றார்.


அவர் எங்கு பிறந்தார் என்பது குறித்து கேட்டபோது, நா சாதாரணமா பிறக்கல; எனக்கும் அரசுக்கும் பிறவி குடுத்ததே ஆன்மிகத்துக்காக தான். நீங்க பார்த்தது வேணா இரண்டு உடலா இருந்திருக்கலாம். ஆனா எங்களுக்குள்ள இருந்தது ஒரு சக்தி தான். 


ஆனா அன்ன பூரணி யாருனு சொல்றதுக்காக இங்க வரல என்று சொல்லிய அவர் கடைசி வரை அன்னபூரணி யார் என்று சொல்லவே இல்ல. அவரை ஆதிபராசக்தி என்று கூறுவது குறித்து கேட்டபோது,  நா என்னைக்காச்சும் கடவுள்னு சொன்னேனா, நா என்னைக்காச்சும் ஆதிபராசக்தினு சொன்னேனானு சொல்லுங்க. என்னைய உணர்ந்தவங்களும், என் குழந்தைகளும் தான் சொல்றாங்க என்றார்.




மீண்டும் அவரது பிறந்த ஊர் வளர்ந்தது குறித்து கேட்டபோது. சொல்வதெல்லாம் உண்மைக்கு வரதுக்கு முன்னாடி தான் நாங்க ரெண்டு பேருக்கும் அப்பாற்பட்ட சக்தியா இருப்பதை உணர்ந்தோம். என்னை தனிப்பட்ட உடலா பிறந்ததாலதானே எங்க பிறந்த என்ன பண்ணுன என்று கேட்குற. நா தான் சொல்றேனே இங்க சக்தியா இருக்கேன் சக்தியா இருக்கேன்னு என்று கோபத்தோடு கூறி பெருமூச்சு வாங்கினார். சாதாரணமா நினைச்சுட்டுருக்கீங்கள்ல.. உங்களால புரிஞ்சுக்க முடியல.. உணர்வுப்பூர்வமான விஷயம்.. உங்க அறிவால இத புரிஞ்சிக்க முடியாது.. என் பர்சனல் லைஃப தெரிஞ்சு என்ன பண்ண போறாங்க..


அன்னபூரணி எப்படி ஆன்மீகவாதியாக ஆனார் என்று கேட்டபோது, சொல்வதெல்லாம் உண்மைல கலந்துகிட்ட பிறகு 2014ல  இயற்கை ஒளின்ற ஆன்மீகப்பயிற்சி குடுத்தோம். அதன்பிறகு நிறைய சீடர்கள் எங்ககிட்ட வந்து சேர்ந்தாங்க.. அரசுங்குற உடல்ல ஆன்மீகப்பயிற்சி குடுத்துக்கிட்டு இருந்தோம். 2019 வரை அந்த ஆன்மீக பயிற்சி போய்கிட்டு இருந்துச்சு. 2019ல காலகட்டத்துல இரண்டு உடலும் தேவைப்பட்டுச்சு. அதனால இரண்டு உடல்ல அந்த சக்தி செயல்பட்டுச்சு. 2019ல எந்த சக்தி அரசுவ குடுத்துச்சோ, அது உடல எடுத்துக்கிட்டதால அந்த சக்தியும், இந்த சக்தியும் ஒன்னா இணைஞ்சு செயல்பட ஆரம்பிச்சிது. அப்ப இந்த உடல்ல இருந்து ஆன்மிக பயிற்சிகளை குடுத்துட்டு இருந்தேன் என்றார் அன்னபூரணி.


எப்படி இத்தனை பேர் சேர்ந்தார்கள் என்ற கேள்விக்கு, எங்ககிட்ட தீட்சை பெற்ற நூற்றூக்கணக்கான குழந்தைகள் இன்றைக்கு  இருக்காங்க. அந்த நூற்றுக்கணக்கான பேரும் உணர்ந்துட்டாங்க. இவங்க குரு இல்ல. நம்மை படைச்ச தாய்தான், நமக்குள்ள இருக்காங்கனு உணர்ந்தாங்க. இது வெளிப்பட்ட பிறகு ஆன்மீகப்பயிற்சியையும், தீட்சை குடுக்குறதையும் நிப்பாட்டிட்டேன். என்னை உணர்ந்த இந்த குழந்தைகள் தான் மக்கள் எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்கனும்னு நோட்டிஸ் ஒட்டுறாங்க. அது தான் இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு என்றார்.




மேலும், என்னை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும், அவமானப்படுத்தினாலும் எனக்கு எதுவும் இல்லை.. சக்தினு சொல்லி என் குழந்தைங்க அவ்ளோ மரியாதை பண்றாங்க. அதை உடல்னு நினைச்சு நீங்க அசிங்கப்படுத்திட்டுருக்கீங்க. இங்க சாமி கடவுள் மதம் எதுவுமே கிடையாது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கு. போன்ல இருக்கும்போதே ஒரு உணர்வுப்பறிமாற்றம் இருக்கும். நா பேசமாட்டேன். ஆனா லைன்ல இருக்கும்போதே ஒரு வைப்ரேசன் இருக்கும் எதிர்ல இருக்கவங்க அதை உணர்ந்துடுவாங்க. என்று அன்னப்பூரணி கூறினார்.


நீங்க கடவுளா என்று கேட்டபோது,  மனுசன் கடவுளாக மாறவே முடியாதுங்க. கடவுள்னு ஒன்னு கிடையவே கிடையாது. ஒரு சக்தி தான் இருக்கு. அதை தான் இவங்க பல கடவுள்களா பிரிச்சுவச்சிருக்காங்க. என் குழந்தைகளில் இந்து, கிறிஸ்டின், முஸ்லிம் எல்லா மதத்தினரும் இருக்காங்க. காலில் பூ தூவது குறித்து கேட்டபோது, நீங்க உடலா பார்க்குறீங்க குழந்தைகள் அப்படி இல்ல. தன்னை படைச்ச தாய்க்கு நன்றி விசுவாசத்துல தான் அப்படி பன்றாங்க. பூப்போடுங்கனு நா யாரையும் சொல்லல. அவங்க ஆசைப்பட்டு செய்றாங்க. நா எப்டி தடுக்க முடியும்.? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.


இருக்கையில் அமர்ந்திருக்கும்போது குதிப்பது ஏன் என்று கேட்டபோது, என் சக்தி அளவுக்கு அதிகமா வெளிப்படும். அப்ப என் உருவமே இரண்டா இருக்கும். முகம் பெருசாகிடும். அப்ப என்னோட உடம்பு குதிக்க ஆரம்பிக்கும். என் குழந்தைகள் அழுவாங்க, அந்த உணர்வுல நானும் அழுவேன். இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறி முடித்துக்கொண்டார்.




இறுதியாக மக்களுக்கு ஒன்னு சொல்லனும் என்று பேசிய அவர், உங்க மனசுல ரொம்ப குப்பைகள வச்சுருக்கீங்க. ரொம்ப ஆணவத்துல செயல்பட்டுட்டுருக்கீங்க. நீங்க அந்த கண்ணோட்டத்துல இருந்து என்ன பார்க்குறதாலதான் உங்களுக்கு நா தவறானவளா தெரியுறேன். என்னை இயக்கும் சக்தி படி தான் நான் இயங்கிகிட்டு இருக்கேன். யாருக்கும் எந்த மதத்துக்கும் எதிர்த்து செயல்படல. எல்லாரும் சொல்ற மாதிரி நா தலைமறைவாலாம் இல்ல. யாரு பார்க்கனுமோ வந்து பார்க்க சொல்லுங்க நா பார்க்குறேன் என்று புன்னகைத்தவாறே கிளம்பினார் அன்னப்பூரணி. 


இது குறித்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திய லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, “அந்த பெண்ணின் வீடியோக்கள் நிறைய வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த வீடியோக்களை எல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம் மக்கள் ஏமாந்து போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.


அன்னபூரணியின் கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்து பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது மிக மிக தவறான விஷயம். முட்டாள்தனமும் கூட. சாமி என்று சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் நாம் ஏமாற தயாராக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். என்று ரியாக்ட் செய்திருக்கிறார்.


அன்னப்பூரணியின் பேட்டியை லைவில் பார்த்த சமூக வலைதளவாசிகள் என்னென்ன சொல்றான் பாருங்க.. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் என்று கூறி கிண்டல் செய்துவருகின்றனர்.