ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. முதல்நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணி முதல் திரையிடப்பட்டு வருகிறது. இதையடுத்து படம் பற்றிய விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. 


இந்நிலையில் ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று பார்த்தனர். இதையடுத்து படம் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் கமெண்ட்களை இட்டு வருகின்றனர். பஞ்சாயத்து தலைவராக இருக்கும் காளையனை சுற்றி படம் நகர்கிறது. முதல் பாதியில் செண்டிமெண்டுகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் இரண்டாம்பாதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. கதையும், திரைக்கதையும் பழைய பஞ்சாங்கமாக உள்ளதாக சிலர் தெரிவிக்கிறார்கள். விமர்சனங்களின் அடிப்படையில் நீங்கள் படம் பார்க்க திட்டமிட்டுள்ளீர்கள் எனில் இந்த ட்வீட்களை ஒருமுறை படித்துவிடுங்கள். 


















































 


.