தமிழ் சினிமாவில் சென்ற ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி பெரும் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத்.


அனிருத்தின் அமெரிக்க டூர்:


இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2, விஜய்யின் லியோ , இந்தியில் ஷாருக்கானின் ஜவான் என டாப் ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து கலக்கவிருக்கும் அனிருத் தற்போது இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்க டூர் சென்றுள்ளார்.


தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ ( Once upon a time ) இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் இருக்கும் அனிருத், அமெரிக்காவில் தானே ஒரு இனிமையான ரசிகனாகவும் மாறிய நிகழ்வும் நடந்துள்ளது.


குட்டி ரசிகன்:


வாஷிங்டன் டி.சியில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சனிக்கிழமை நியூ ஜெர்சியில் தங்களது அடுத்த நிகழ்ச்சியை முன்னதாக அனிருத் தனது இசைக்குழுவுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது ரசிகர்கள் பல பேருடன் கலந்துரையாடிய அனிருத் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்ட நிலையில், இந்த நிகழ்வின்போது அனிருத்தின் சுட்டி ரசிகர் ஒருவர் லியோ படத்தின் தீம் பாடலை முழு உற்சாகத்துடன் பாடி அனிருத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.


நியூஜெர்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது சிறுவன் ஒருவர் லியோ தீம் பாடலை அனைவர் முன்னிலையிலும் ஸ்ருதி பிசகாமல், வரிகளை மறக்காமல் சிறப்பாகப் பாடிக் காண்பித்து அசத்தினார்.  சிறுவனின் இந்தப் பாடல் அங்கிருந்தோர் அனைவைரையும் ஈர்த்த நிலையில், அங்கு கூடியிருந்தவர்கள் அதற்கு ஆர்ப்பரித்து வரவேற்பு அளித்ததனர்.


இந்நிலையில், சிறுவனின் பாடும் திறமையை கண்டு பிரமித்துப்போன அனிருத், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸையே அவருக்கு பரிசாக அளித்து சிறுவனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.


 






2023 ஏப்ரல் 15ஆம் தேதியில் இந்த இசை சுற்றுப்பயணத்தை முடிப்பதற்கு முன்பாக, வரும் நாட்களில் டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் ஆக்லாந்து ஆகிய இடங்களில் அனிருத் குழு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.   அனிருத்தின் இசையமைப்பில் தற்போது ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, தலைவர் 170 மற்றும் என் டி ஆர் 30 ஆகிய படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Manisha Koirala on Baba: பாபா படத்தால் என் மார்க்கெட்டை இழந்தேன்... மனிஷா கொய்ராலாவின் ஸ்டேட்மென்ட்! கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்