தேனி மாவட்டம், கம்பத்தில் மூதாட்டியை கொலை செய்ததாக 6 நாட்களுக்கு பின் அதே பகுதியைச்சேர்ந்த  13 வயது சிறுவனை தெற்கு போலீசார்  கைது செய்தனர்.


தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி தெருவில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய்(80), இவர்மகன் வழிப்பேரன் போத்திராஜாவின் பராமரிப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த 25ம் தேதி வீட்டில் தலையில் காயம்பட்டு இறந்து கிடந்தார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, ராமுத்தாய் அணிந்திருந்த தங்க நகையையும் காணாமல் போயிருந்தது.


School Holiday: புயல் எச்சரிக்கை! டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...எந்தெந்த மாவட்டங்கள்?




இதுகுறித்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.லாவண்யா தலைமையில் தனிப்படையினர் கொலையாளியை தேடி வந்தனர். 5 நாட்களாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்காமல் திணறிய போலீசார் 9 கைரேகை பதிவு அடிப்படையில் அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக இருக்கும் 50-க்கும் மேலானவர்களிடம் கைரேகை எடுத்து விசாரித்ததில் பவுன்ராஜ் என்பவரின் 13 வயது மகன் கைரேகை 10 ஒத்துப்போனது.


Child Kidnapped: 6 ஆண்டுகளில் 250 பச்சிளம் குழந்தைகள் விற்பனை - பெங்களூருவில் சிக்கிய கும்பல் தந்த பகீர் தகவல்




அமலாக்கத்துறை அதிகாரி கைது; FIR-ல் இருப்பது என்ன? - வெளியான திடுக்கிடும் தகவல்


விசாரணையில், தண்ணீர் கேட்டதாகவும் அதற்கு ராமுத்தாய் திட்டியதாகவும், ஆத்திரமடைந்து கீழேதள்ளிவிட்டதில் இறந்துவிட்டதால், அணிந்திருந்த தங்க நகையை எடுத்து வீட்டில் மறைத்து வைத்துவிட்டதாக கூறிய சிறுவன், இது தனது பெற்றோருக்கும் தெரியாது என்று தெரிவித்தான். இதுதொடர்பாக சிறுவன் மீது தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.