நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்து  டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் அனிகா சுரேந்தர். இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, சந்தீப் கிஷன் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர்.


தனுஷ் இயக்கி நடிக்கும் டி50


கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகிவருவதாகக் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்திய தனுஷ், தன்னுடைய கெட்-அப்பை மாற்றியுள்ள நிலையில், இந்த போர்ஷன்களுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்களில் நடித்துள்ள அனிகா சுரேந்திரன், டி50 படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


வடசென்னையை மையமாக வைத்து டி50 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்திற்கு  ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தனுஷ் முன்னதாக தான் இல்லாத போர்ஷன்களை இயக்கி வந்த நிலையில், தற்போது தன்னுடைய போர்ஷன்களையும் எடுக்கத் தொடங்கியுள்ளார்.


கேப்டன் மில்லர்


நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அவரது கேப்டன் மில்லர் படம், தரமான சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க, 


Manipur Violence: மணிப்பூர் வன்முறை: 6,532 எஃப்ஐஆர் பதிவு...இதுவரை என்ன செய்தீர்கள்? - உச்சநீதிமன்றம் கேள்வி


TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகும்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..