பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'அந்தாதூன்' திரைப்படம் தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரஷாந்த் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


 



 


பிரேக் முடிந்து ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் பிரசாந்த் :


90'ஸ் களில் ஒரு டாப் ஸ்டார் ஹீரோவாக வலம் வந்த நடிகர் பிரஷாந்த். 2018ம் ஆண்டு வெளியான "ஜானி" திரைப்படத்திற்கு பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் திரைப்படம் "அந்தகன்". மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜன். ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. 


 






 


பிரபலங்கள் இணையும் "டோர்ரா புஜ்ஜி" பாடல் :


படத்தின் இறுதிக் கட்டமாக "டோர்ரா புஜ்ஜி" எனும் பாடலை சந்தோஷ் நாராயணன் இசையில் இணைந்து பாடியுள்ளனர் ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் நடனப்புயல் பிரபுதேவா மாஸ்டர். நடிகர் பிரசாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த், மற்றும் 50க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆட உள்ள இப்பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக பிரமாண்டமான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாடல் படமாக்கப்பட்ட உடன் 'அந்தகன்' படத்தின் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெறவுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'அந்தகன்' திரைப்படத்தை உலகளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார் கலைப்புலி S தாணு. பாலிவுட்டில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற இப்படம் நிச்சயமாக தமிழிலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.   


 






 


இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் பிரசாந்த் தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்குவார் என்பது தான் அவர்  ரசிகர்களின் எதிர்பார்ப்பு.