‘சன் செய்திகளுக்காக உங்கள் மோனிகா’ என்ற கொஞ்சும் குரலை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா. வானிலை செய்தியை பலரும் பார்க்கத் தொடங்கியதே இந்த மோனிகாவால் தான் என்றால் அது மிகையல்ல.


க்யூட்டாக வெஸ்டர்ன் ட்ரெஸ் போட்டு அவர் திண்டுக்கல் வானிலை பற்றி பேசுவார். இருந்தாலும் அந்த க்யூட்னஸ் ஓவர்லோடட் ஃபேக்டருக்காகவே அந்த சில நிமிட செய்தித் தொகுப்பை கோடிக் கணக்கானோர் பார்த்தது உண்டு. செய்தி வாசிப்பாளர் கனவுடன் வந்த அவர், தனக்குக் கிடைத்த 2 நிமிட ஸ்லாட்டை மெகா ஹிட் ஆக்கினார்.
மோனிகா பேசிக்காகவே மனசுல பட்டதை பளிச்சின்னு பேசுற டைப். ஆனால், ஒருக்கட்டத்தில் இவரது வெளிப்படைத்தன்மையே இவரது வேலைக்கும் உலை வைத்தது என்பது வேறு கதை.
பின்னர் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிறார். அதில் தன் மனதிற்குப் பட்ட சமூகப் பிரச்சினைகளைப் பேசிவருகிறார்.


சமீபத்தில் கூட ஜெய் பீம் படம் குறித்து இவர் சூர்யாவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.  அந்த வீடியோவிற்கு கீழ் கூட இவருக்கு ஏகப்பட்ட வீடியோவிற்கு ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. இவரது கணவர் சாம் ”செவன் மைல்ஸ் பெர் செகண்ட்’ என்கிற பொலிட்டிகள் பிராண்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். Lkg படத்தில் பிரியா ஆனந்த் செய்யும் அதே வேலை பிரியா மேலும், இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் நடந்த விழா ஒன்றில் மோனிகா தனது குடும்பம் குறிப்பாக மாமியார் பற்றி உருகி உருகிப் பேசியவது ஒட்டுமொத்த தமிழகத்தையுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.




மோனிகா பேசியதில் இருந்து..


எனக்கும் சாமுக்கும் எக்கச்சக்க வித்தியாசம், வேறுபாடு உண்டு. சாம் ஒரு சிரியன் கிறிஸ்டியன். நான் பிராமணப் பெண். அவர் அசைவப் பிரியர். நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன். அவருக்கு நண்பர்கள் ஏராளம். நானோ இன்ட்ரோவெர்ட். இப்படியிருக்க நாங்கள் எப்படி காதல் திருமணம் செய்து கொண்டோம் என நிறைய பேர் இன்றும் கூட கேட்பார்கள். என் தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அதனால் நானும் தம்பியும் ஹாஸ்டலில் இருந்தோம். வருடத்துக்கு ஒருமுறை பெரியம்மா வீட்டிலாவது, மாமா வீட்டிலாவது சந்திப்போம். அதனால் குடும்பம் என்ற வரம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் சாமும் காதலித்தபோது அவர் வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போது மம்மி என்னிடம் பேசமாட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனால், சாம் மேல மம்மியும், பப்பாவும் காட்டும் அன்பு என்னை ஈர்த்தது. அதனால் என்னையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொண்டேன்.


கல்யாணம் முடிந்து வீட்டுக்குப் போனால் வாசலில் கோலம், ஆரத்தி, காய்கறி சமையல் என தலையில் கிரீடம் வைத்ததுபோல் வரவேற்பை மம்மி அளித்தார். மம்மி என்னை இந்த 12 வருடங்களில் அப்படிப் பார்த்துக் கொண்டார். உண்மையில் இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையே நானும் சாமும் இணைந்து வாழ மம்மி தான் காரணம். நான் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்றால் பின்னாடியே வந்து சமாதானம் செய்வார். சாம் உன்னை காதலித்து திருமணம் செய்தான். அவன் நிறைய உனக்காக வீட்டில் பேசினான்.


அவர் அப்போது உன்னிடம் நேசித்தது என்னவென்பதை தேடி மீட்டெடு என்பார். சாம் தவறு செய்தால் தட்டிக் கேட்பார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். அவரைப் போன்ற மாமியார். மம்மி, பப்பா, சாம் போன்ற குடும்பம் யாருக்கும் கிடைக்காது. என்னை எதிலுமே அம்மா விட்டுக் கொடுத்தது இல்லை.


மம்மி கடைசி நிமிடத்தில் சாமை அழைக்கவில்லை. என்னைத்தான் அழைத்தார். அவர் என்ன சொல்ல விரும்பினார் என்பது எனக்குத் தெரியும். என் உயிருள்ளவரை மம்மி என்ன விரும்பினாரோ அதே போல் இருப்பேன்.


இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்