நல்ல நேரம் :


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு கடும் எதிர்ப்பு உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் போட்டியாளர்கள் மூலம் மன உளைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தினருடன் கவனத்துடன் பழக வேண்டும். சிவபெருமானை வணங்கி அமைதி காணுங்கள்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நல்ல நாள். பிரியமானவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள். தொழில் மற்றும் வியாபாராத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல்கள் அகலும். நல்லவர்கள் நட்பு கிட்டும்.


கடகம் :


கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று மறதி ஏற்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சிக்கல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஊக்கமான நாளாக அமையும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்கள் இலக்கிற்கு ஒத்துழைப்பார்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமையும். வாழ்வில் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான முக்கிய நிகழ்வுகள் நடக்கும். புதிய முன்னேற்றம் காண்பீர்கள்.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். நீண்ட நாட்கள் நீடித்து வந்த சிக்கல்கள் அகலும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே இருந்து வந்த மனக்கசப்பு அகலும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூலாகும். தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.


தனுசு:


தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். தொழிலில் புதிய ஆர்டர்கள் குவியும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். வரன்கள் வாயில் வந்து சேரும்.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தேவையில்லாத பயம் உண்டாகும். ஆஞ்சநேயரை வணங்கி நிம்மதி காணுங்கள். தொழிலில் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் கிட்டும். தங்கை வழி காரியம் ஜெயமாகும். அம்மனை வணங்கும் பாக்கியம் கிட்டும்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு போட்டி உண்டாகும். தொழிலில், வியாபாரத்தில் போட்டிகள் பலமாகும். தேவையற்ற சஞ்சலங்கள் மனதில் உண்டாகும். குழப்பங்கள் தீர துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண