மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான எமி ஜாக்சன் அந்தப் படத்தில் துரையம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் எமி ஜாக்ஸன். முதல் படத்திலேயே மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் எமி ஜாக்ஸன். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த எமி ஜாக்ஸன், ஏக் தீவானா தா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தெலுங்கில் எவடு என்ற படத்தில் ராம் சரணுடன் நடித்தார் எமி ஜாக்ஸன். பாலிவுட் டோலிவுட் என பிஸியாக இருந்தாலும் எமி ஜாக்ஸன், கோலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். விக்ரமுடன் தாண்டவம் படத்தில் நடித்த எமி ஜாக்ஸன், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படத்திலும் நடித்தார்.மேலும் தனுஷுடன் தங்க மகன், உதயநிதி ஸ்டாலினுடன் கெத்து, விஜய்யுடன் தெறி ஆகிய படங்களில் நடித்து பீக்கில் இருந்த எமி கடைசியாக தமிழில் 2.0 படத்தில் நடித்தார். இந்த படத்தில் ரோபோவாக நடித்த எமி ஜாக்சன், அதோடு காணாமல் போனார். அதன் பிறகு அவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.



இந்நிலையில் ஜார்ஜ் பனயிட்டோ என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஆண்ட்ரீஸ் பனயிட்டோவின் மகன் ஆவார். இவர்களுக்கு பல ஸ்டார் ஓட்டல்கள் உள்ளன. திருமணத்திற்கு முன்பே காதலரால் கர்ப்பமானார் எமி ஜாக்ஸன். அவருக்கு 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் ஏமி ஜாக்சன் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இதுவரை திருமணம் நடைபெறவில்லை. அதன் பிறகு தனது காதலரின் போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கினார் எமி ஜாக்ஸன். இதனால் காதலரை பிரிகிறாரா எமி என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடிய எமி ஜாக்ஸன் பிறந்தபோது எடுத்த குழந்தையின் போட்டோ மற்றும் தற்போது வளர்ந்த மகனுடன் தான் இருக்கும் போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் எமி ஜாக்ஸன்.



மேலும் அந்த போட்டோவுக்கு 'இன்று நீ இரண்டாவது வயதை அடைந்துள்ளாய் என் அழகான ஆண் குழந்தையே. நீ நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்தவன் மற்றும் உன் அம்மாவாக நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீ நம்பமுடியாத சிறிய மனிதனாக வளர்கிறாய் என பதிவிட்டுள்ளார். நடிகை எமி ஜாக்ஸன் தனது மகனுடன் இந்த ஸ்பெஷல் நாளுக்காக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட மதிய உணவு உண்ணும் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படமாக பகிர்ந்து கொண்டார். படங்களில், எமி தனது சிறிய குழந்தையை அன்போடும் பாசத்தோடும் கட்டிப்பிடித்து மார்போடு அணைத்துள்ளார். இந்த போட்டோக்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.