எமி :
தமிழில் மதராசப்பட்டிணம் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். முதல் படத்திலேயே எமியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கினர். அந்த படத்தை தொடர்ந்து ரஜினியுடன் ரோபோவாக 2.0, விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் ஐ, தனுஷுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
காதல் :
6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை எமி காதலிப்பதாக கூறி வந்தார். அதன் பிறகு ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் கிசு கிசுக்கப்பட்டார். பின்னர் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள போவதாக அறிவித்து அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைப்பெற்றது.
அம்மாவான ஏமி !
திருமணத்திற்கு முன்னதாகவே எமி அம்மாவானார். எமி-ஜார்ஸ் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் ஜேக்ஸ் பனாயிடோ என பெயர் வைத்தனர் இதற்கிடையே எமி, ஜார்ஜ் உடனான தனது இன்ஸ்டாகிராம் படங்கள் அத்தனையையும் நீக்கினார். எமியும் ஜார்ஜும் பிரிந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் எமி தொடர்ந்து தனது மகனுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மகனுடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் கடற்கரையில் தனது மகன் ஆட்ரியாஸுடன் நேரம் செலவிட்டிருக்கிறார். பீச்சை பார்த்தவுடன் மகன் துள்ளிக்குதித்து நடனமாடும் காட்சியை ஏமி தனது புகைப்படத்தில் படம் பிடித்து ரசித்துக்கொண்டிருக்கிறார்.
புதிய காதலர் :
இதற்கிடையே எமி பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. 'Gossip Girl' நடிகரான வெஸ்ட்விக்குடன் தற்போது நேரம் செலவிட்டு வருவதாகவும், திரைப்பட விழாக்களிலும், பொது இடங்களிலும் இந்த ஜோடியை அடிக்கடி காண முடிவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தங்களது காதலை உறுதி செய்யும் விதமாக எமியும், வெஸ்ட்விக்கும் தங்களது இன்ஸ்டாவில் ஜோடியாய் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இருவருமே மிகவும் நெருக்கமாக ஒரே புகைப்படத்தை ஸ்டோரியாக வைத்ததால் அவர்களின் காதல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.