எமி ஜாக்சன்:


2010ம் ஆண்டு இயக்குநர் விஜயின் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக இந்தியத் திரைப்பட உலகத்தில் நுழைந்தார் எமி ஜாக்சன். தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வந்த எமி எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0ல் அக்‌ஷய் குமார், ரஜினி காந்த் ஆகியோருடன் நடித்தார். அந்தப் படத்தில் ரோபோவாக நடித்த எமி, கடைசியாக நடித்த படமும் அதுதான். அதன் பிறகு ஜார்ஜ் பனையீட்டூ என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பின்னர் அதே தொழிலதிபருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டார்.






பின்னர் ஏமி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் ஆண்டனி ஜாக்சன் பனையீட்டூ எனப் பெயரிட்டனர். இதற்கிடையே எமி, ஜார்ஜ் உடனான தனது இன்ஸ்டாகிராம் படங்கள் அத்தனையையும் நீக்கினார். ஏமியும் ஜார்ஜும் பிரிந்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து தனது மகனுடனான படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் எமி. மேலும் கான்ஸ் உள்ளிட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். குழந்தை பிறந்த பிறகு ஃபிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். என்றாலும் புதிதாகத் தற்போது படங்கள் எதிலும் நடிப்பதாக அறிவிக்கவில்லை. தொடர்ச்சியாக மாடலிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் 






டேட்டிங்...


இதற்கிடையே எமி  பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. 'Gossip Girl' நடிகரான வெஸ்ட்விக்குடன் தற்போது நேரம் செலவிட்டு வருவதாகவும், திரைப்பட விழாக்களிலும், பொது இடங்களிலும் இந்த ஜோடியை அடிக்கடி காண முடிவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தங்களது காதலை உறுதி செய்யும் விதமாக எமியும், வெஸ்ட்விக்கும் தங்களது இன்ஸ்டாவில் ஜோடியாய் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இருவருமே மிகவும் நெருக்கமாக ஒரே புகைப்படத்தை ஸ்டோரியாக வைத்ததால் அவர்களின் காதல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.






பாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க நடிகை தமராவுடன் உறவில் இருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். 2018ம் வெஸ்ட்விக் மீது 3 பெண்கள் பாலியல் புகார் அளித்து பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்தே வெஸ்ட்விக் -தமரா உறவிலும் சிக்கல் ஏற்பட்டது. பாலியல் புகார் அளிக்கப்பட்ட போதும் விசாரணைக்கு சரியாக அப்பெண்கள் ஒத்துழைக்காத காரணத்தால் இந்த புகார் அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை.