ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வாத்தியார் செந்திலைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்க, அப்போது மாயா அமுதாவை கோர்த்து விடுவது போல் பேசிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, வாத்தியார் வெளியே சென்றதும் அன்னலட்சுமி பெருக்குமாறை எடுத்து மாயாவை அடிக்க போவைத்து மட்டுமில்லாமல், நீ என் மருமகளா என கோபப்படுகிறாள். அடுத்து மாயா அன்னலட்சுமியிடம் “அமுதா கல்யாணம் ஆகலேன்னு ஸ்கூல்ல சொல்லிருக்கா, இது நியாயமா” என கேக்க, அன்னம், “என் மருமக தியாகிடி” எனப் பாராட்டி பேசுகிறாள்.


அடுத்ததாக இரவு உமாவும் மாயாவும் தூங்கிக் கொண்டிருக்க, உமா ஏதோ சத்தம் வருவதாக மாயாவை எழுப்பி ஜன்னலைப் பார்க்க, கருப்பு உருவம் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து மாயாவை பார்க்க சொல்ல, மாயாவும் பார்த்து விட்டு அலறுகிறாள்.


பிறகு மாணிக்கமும் அன்னலட்சுமியும் கருப்பு போர்வை போர்த்திக் கொண்டு முகத்தில் மாஸ்க் மாட்டியபடி இருவரையும் பயமுறுத்தியது தெரிய வருகிறது. மாணிக்கம் வேஷத்தைக் கலைத்து விட்டு அமுதாவிடம் “உன் மாமா ஆவியா வந்துருப்பாரும்மா” என சொல்ல, மாயா “இங்க பேய் இருக்கா” என பயப்படுகிறாள்.


மாயாவும் உமாவும் மீண்டும் தூங்க செல்ல, மாணிக்கம் மீண்டும் வேஷமிட்டு பயமுறுத்துகிறார். மாயாவும் உமாவும் தூங்காமல் ஹாலில் பயத்துடன் அமர்ந்திருக்க, மாணிக்கம் அவர்களிடம் “ஒழுங்கா வீட்டை விட்டு ஓடிருங்க” என சொல்கிறார்.


அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் அமுதாவும் செந்திலும் கிளாஸ் முடிந்து ஒன்றாக நடந்து வர, மாயா டிபன் கேரியருடன் வர செந்தில் அவளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க, ஹெ.எம் மகன் வருகிறார். செந்தில் அவன் முன் சமாளிக்க வாத்தியார் அமுதாவை “இத்தனை நாள் ஸ்கூலுக்கு வராம எங்க போனீங்க” என திட்டுகிறார். மாயா அவனை சாப்பிட அழைக்க செந்தில் வேறு வழி இல்லாமல் அவள் பின்னால் செல்கிறான்.


மாயா செந்திலுக்கு சாப்பாடு பரிமாற, அதைப் பார்த்து அமுதா வேதனைப்பட அமுதாவுடன் படிக்கும் மாணவர்கள் “என்ன பிரச்சனை, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” எனக் கேட்கின்றனர். இதனைத் தொடர்ந்து அமுதா மாணவர்களிடம் தனக்கு கல்யாணம் ஆகி விட்டதாகவும், செந்தில் தான் தன் கணவர் எனவும், மாயா தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதாகவும் சொல்ல மாணவர்கள் “நாங்க மாயாவை பார்த்துக்குறோம், நீங்க கவலைப்படாதீங்க” என ஆறுதல் சொல்லிவிட்டு மாயா வர அவள் மேல் பெட்ஷீட்டை போர்த்தி அனைவரும் சேர்ந்து அடி வெளுத்தெடுக்கின்றனர்.


இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.