பிகில் நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி ரீலீஸாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியானது ‘பிகில்’ திரைப்படம்.


கால்பந்தாட்டத்தை அதுவும் பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 


தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி போட்டு வெற்றியும் கண்டனர். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். 


ஆனால், இந்த படத்தின் மூலம் புதிய பிரபலத்தை பெற்றது அம்ரிதா ஐயர் தான். இந்தப் படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்தார் தெத்துப்பல் அழகி அம்ரிதா ஐயர். விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். மேலும், போக்கிரி ராஜா, படைவீரன் காளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா. 


விஜய் ராசியோ என்னவோ இப்போது இவர் தனித்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் நடிகை அம்ரிதா ஐயரின் இஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார் அம்ரிதா. திடீரென டவலுடன் ஹாட் போஸ், லெஹங்காவில் க்யூட் போஸ் என இவருடைய போட்டோக்கள் களைகட்டும். அதற்காகவே இவருடைய பக்கத்தில் இளைஞர்கள் வரிசைகட்டி குவிவர். 


இந்நிலையில், அவரது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தில் அம்ரிதாவின் ட்விட்டர் கதவைத் தட்டினர் ரசிகர்கள். அப்போது அவரே ட்விட்டரில் பதிலளித்தார்.






அதில், ஆமாம். எனது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் மீட்கப்படும் என நம்புகிறேன். விரைவில் சந்திப்போம் என்று பதிவிட்டிருந்தார்.


அம்ரித ஐயர் தற்போது தெலுங்கில் ஹனு மேன் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.