Just In





Ammu: ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகும் ‛அம்மு’... அக்.19ல் ஓடிடி ரிலீஸ்!
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நவீன் சந்திரா - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் மிகவும் பரபரப்பான படமான "அம்மு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நவீன் சந்திரா - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் மிகவும் பரபரப்பான படமான "அம்மு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், சாருகேஷ் சேகர் இயக்கத்தில் நவீன் சந்திரா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பாபி சிம்ஹா நடிப்பில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் "அம்மு". தனித்துமான கதைக்களத்துடன் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ளது "அம்மு". ஒரு பெண்ணின் வலிமையை பற்றியும் நெகிழ்ச்சியை பற்றியும் எடுத்துரைக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

ஓடிடியில் ரிலீஸ்:
தெலுங்கில் தயாரான இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 19ம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளதால் படத்தின் ரிலீஸ் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரபலத்தின் உச்சிக்கு சென்ற ஐஸ்வர்யா லக்ஷ்மி:
மலையாள சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் "ஜகமே தந்திரம்" திரைப்படம் மூலம் அறிமுகமாகி இன்று ஒரு வளர்ந்து வரும் நடிகையாக பிரபலமாகி வருபவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. கார்கி, கேப்டன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தற்போது பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்ற உலகமே கொண்டாடும் ஒரு திரைப்படமான இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தில் பூங்குழலி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்று விட்டார். இப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பு ரசிகர்களை ஈர்த்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது குஸ்தி, கிங் ஆஃப் கோத்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. ஏற்கனவே இயக்குனர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் வெப் சீரிஸான ட்ரிப்பிள்ஸ் தொடரை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இரண்டாவது முறையாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ள திரைப்படம் "அம்மு" என்பது குறிப்பிடத்தக்கது.