சீரியல்களில் நடிக்கும் ஜோடிகள் ரீல் லைஃப்பில் மட்டுமல்லாது ரியல் லைஃப்பிலும் இணைவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் கூட செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவுக்கும், பாக்கிய லட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனுக்கு இடையே திருமணம் நடந்தது.






 


அந்த வரிசையில் தற்போது இன்னொரு ஜோடியும் இணைய உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.. என்ன கதை என்று கேட்கிறீர்களா?  


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ஒளிப்பரப்பாகி 800 எபிசோடுகளை கடந்து மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் சீரியல் அம்மன்.இந்த சீரியலில் பவித்ரா கௌடா நாயகியாகவும், அமல்ஜித் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். புது நடிகர்கள் பலர் அம்மன் சீரியலுக்குள் நுழைந்து வரும் நிலையில், அண்மையில் நடிகை நிவிஷாவும் மற்றொரு கதாநாயகியாக இணைந்தார். இந்த சீரியல்இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்ததில் இதில் நடித்து வரும் பவித்ரா கௌடாவுக்கும், அமல்ஜித்துக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 


இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இவர்கள் அளித்த பேட்டிகளின் வாயிலாக அது உறுதியானது. இந்த நிலையில் இந்தக் காதலை அவர்கள் இணைந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் மீண்டும் ஒரு உறுதிப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. 






ஆம், அமல்ஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பவித்ராவுடன் நெருங்கிய இருக்கும் அமல்ஜித்  மை ஹாஃப், லவ் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் உங்களின் திருமணம் எப்போது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.