இன்றைய ட்ரெண்டிங் அஜித்குமார். தன்னை  தல என்று அழைக்க வேண்டாமென இன்று  அறிக்கை விடுத்தார் அஜித்குமார். இந்நிலையில் தல என்ற செல்லப்பெயர் குறித்து அஜித் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி   வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர்


''ரசிகர்கள் ஏன் தல தலன்னு கூப்பிடுறாங்க?'' என்ற கேள்வி  எழுப்புகிறார். அதற்கு பதில் அளித்த அஜித்குமார், ''அதை ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு  தீனா படம் காரணமாக இருக்கலாம். அந்தப்படத்தில்தான் தல என்ற வார்த்தை அதிகம் வரும். அதுதான் ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் என நினைக்கிறேன்'' என்றார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.






முன்னதாக,


பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.


ஜெய்பீம் திரைப்படத்தை பார்க்க நேரமில்லை - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி


உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தையும் அஜித்குமார் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாக்லெட் பாயாக அறியப்பட்ட அஜித்குமார், தீனா திரைப்படம் மூலம் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார். அந்தப்படத்திலேயே தல என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.


 






ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண