பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். அமிதாப் எப்பொழுதுமே தன்னுடைய வாழ்க்கையை குறித்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பார். நேற்று அவருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர்கள் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.இந்நிலையில் அவர் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
எந்த அப்டேட்டும் தரப்போவதில்லை!
தற்போது தொற்று காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு குணமாகி வருகிறார். அமிதாப் பச்சன் தன்னுடைய வலைப்பதிவில் (blog) தனது எண்ணங்களையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் பதிவிட்டு வருவது அவரது வழக்கம். நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனது டம்ஃப்ளர் பக்கத்தில் புதிய குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார். தனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மிகவும் வருத்தம் எனக் குறிப்பிட்ட அவர், தனது உடல்நிலை குறித்து எந்த அப்டேட்டும் தரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வெற்றி பெற்றுவிட்டது!
அவர் பதிவிட்டுள்ள குறிப்பில் அவர் எழுதி இருப்பதாவது, ஆம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் ஒன்று,இரண்டு, பூஸ்டர் என அனைத்தையும் எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா வெற்றி பெற்றுவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தம் அளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் தனது உடல்நிலை குறித்து தெரிவிப்பது அர்த்தமில்லை எனவும், அவருடைய வேலைகளில் இருந்து அவரது உடல்நிலை அவரை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். மருத்துவத்துறை மற்றும் மருத்துவர்களின் தொழில் மிகவும் தூய்மையான மற்றும் போற்றப்பட வேண்டியது. அவர்களின் சிந்தனை அல்லது அவர்களது எண்ணத்தில் நுழைய முயற்சிப்பது ஒரு தவறான செயலாகும். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, இத்தனை வருடங்களில் அவர்கள் கற்றுக் கொண்டவற்றையும், நடைமுறைப்படுத்தி வந்த அனைத்தையும் நடைமுறைபடுத்த அவர்களுக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
நம் வாழ்விலும் வேலை நேரங்களிலும் பல மில்லியன் முறை தனிமையை தேடி இருப்போம். ஆனால் நிஜத்தில் நாம் தனிமைப்படுத்தப்படும் போது நமது உடலும் மனதும் அதை ஏற்றுக் கொள்வதில்லை.எனது உடல்நிலை குறித்து செய்தி அளிப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் அளிப்பேன். உங்களுக்கு விரைவில் அப்டேட் கொடுப்பேன். அது என்ன அப்டேட் என்பது எனக்கான சிறப்பு உரிமை என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
பிரம்மாஸ்திரா:
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கும் பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் படம் குறித்த ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, நாகார்ஜுனா ஆகியோர் சமீபத்தில் சென்னையில் பிரம்மாஸ்திரா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒரு மேடையில் தனது மனைவி ஆலியா பட் குறித்து நகைச்சுவையாக கேலி செய்த ரன்பீர், சென்னையில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியின் போது அதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்