‛மழை சுடுகின்றதே அட இது காதலா..’ சங்கீதாவை விஜய் மனைவியாக மாற்றிய பூவே உனக்காக!

Vijay wedding day today: லண்டன் மாகாணத்தில் இருந்தவர் சங்கீதா. விஜயின் இந்த படத்தை பார்த்து மயங்கி சென்னைக்கு வந்து ஒரு ரசிகையாக நடிகர் விஜய்க்கு அறிமுகமாகியுள்ளார். பிறகு ஒரு தோழியாக மாறி கடைசியில் காதலில் முடிந்தது.

Continues below advertisement

Vijay - Sangeetha Wedding Anniversary today : ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ மிஸ் பண்ணவே மாட்டோம்... மனைவிக்காக நடிகர் விஜய் செய்யும் காரியம்  

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் மாஸ் ஹீரோவாக மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் இளைய தளபதி விஜய். படத்தில் நடிக்கும் போது மாஸ்ஸாக நடித்துவிட்டு ஷூட்டிங் முடிந்த பிறகு எதுவுமே செய்யாதது போல் அமைதியாக இருப்பவர் தான் நடிகர் விஜய். இன்றும் தனது இளமையான தோற்றத்தை மெயின்டேயின் செய்து வருவதில் கில்லாடி. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும்  இன்று 23வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். திருமண நாள் வாழ்த்துக்கள்!!!

காதலில் விழுந்த தருணம் :

தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களில் நடிகர் விஜய் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு பிரேக் கொடுத்த படம் "பூவே உனக்காக". நம்ம ஹீரோ விஜய் பார்த்து அவரது மனைவி மயங்கிய படமும் இது தானாம். லண்டன் மாகாணத்தில் இருந்தவர் சங்கீதா. விஜயின் இந்த படத்தை பார்த்து மயங்கி சென்னைக்கு வந்து ஒரு ரசிகையாக நடிகர் விஜய்க்கு அறிமுகமாகியுள்ளார். பிறகு ஒரு தோழியாக மாறி கடைசியில் காதலில் முடிந்தது.

காதல் திருமணம் :

பலருக்கும் தெரியாத ஒரு தகவல் நடிகர் விஜய் - சங்கீதா இருவருக்கும் நடந்தது காதல் திருமணம். ஒரு முறை விஜய் தனது வீட்டிற்கு சங்கீதாவை அழைத்துள்ளார். அதன் மூலம் சங்கீதா விஜயின் பெற்றோருக்கு அறிமுகமானார். பிறகு அவர்கள் இருவரின் நெருக்கத்தை பார்த்து புரிந்து கொண்ட பெற்றோர் அவர்கள் இருவருக்கும் ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். 

அமிதாப் ரசிகர் :

அன்றில் இருந்து இன்று வரை நடிகர் விஜயின் காஸ்டீயூம் டிசைனர்   அவரது மனைவி சங்கீதா தான். அவர் செலக்ட் செய்யும் ட்ரெஸ்ஸை தான் விஜய் இதுவரையில் போடுகிறாராம். விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் அவரின் படம் ரிலீஸ் ஆன உடனேயே ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போய்விடுவார்கள். அதே போல் சங்கீதா நடிகர் அமிதாப் பச்சன் படம் என்றால் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ கண்டிப்பாக போய்விடுவாராம். எத்தனை பிஸியாக இருந்தாலும் விஜய் தனது மனைவியை படத்திற்கு அழைத்து சென்று விடுவாராம். 

என்னுடைய முதல் ரசிகை மற்றும் விமர்சகர்:

வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் லண்டன் சென்று விடுவார்களாம். அங்கு சங்கீதாவின் பெற்றோரோடு இருந்துவிட்டு ஐரோப்பிய நாடுகளை சுற்றிவிட்டு தான் திரும்புவர்களாம். நடிகர் விஜய் பல இடங்களில் தனது மனைவி சங்கீதா பற்றி கூறுகையில் " எனது மனைவி தான் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட், காஸ்டீயூம் டிசைனர், முதல் ரசிகை மற்றும் விமர்சகர்" என்றுள்ளார். 

ஆதர்ஷ தம்பதிகள்:

23 ஆண்டுகளுக்கு பின்னரும் இவர்கள் இருவரின் அன்பு இன்றும்  அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இவர்கள் இருவரின் அன்பின் அடையாளமாக இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்கள். மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாஷா. நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியான திருமணமான தம்பதியருக்கு இவர்கள்  இருவரும் ஒரு சிறந்த உதாரணம்.

 

Continues below advertisement