28 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் இன்று நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொண்டார். இவர்களுடன் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ராணி முகர்ஜி மற்றும் மகேஷ் பட் போன்ற பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்கத்தின் பெருமை :
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய போது மேற்கு வங்காளத்தின் சிறப்புகள் பற்றி பேசினார். அவர் கூறுகையில் ஒரு நீண்ட வரலாற்றை க்கொண்ட மேற்கு வங்க ஒற்றுமை, நேர்மை மற்றும் மனிதநேயத்திற்காக என்றுமே போராடி வருகிறது. அதே சமயத்தில் யாரிடமும் எதற்காகவும் கையேந்தி நிற்காது, தலை வணங்காது என தனது தொடக்க உரையில் பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அமிதாப் பச்சனுக்கு புகழாரம் :
மேலும் அவர் நடிகர் அமிதாப் பச்சன் குறித்து பேசுகையில் "இந்திய திரையுலக நடிகர்களில் தலைசிறந்தவராக விளங்கும் அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன் விருதை பெற்றவர். ஆனால் அந்த பெருமை மட்டும் போதாது அவர் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டும். இந்திய சினிமாவிற்கு அவரின் பங்களிப்பு ஏராளம் அதனால் அவர் பாரத ரத்னா விருதை பெற அனைத்து வகையிலும் தகுதியானவர் என புகழாரம் சூட்டினார் மம்தா பானர்ஜி. அவரின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.