Amitabh Bachchan Rajinikanth: வேட்டையன் திரைப்படத்திற்காக 32 ஆண்டுகள் கழித்து, அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளனர்.
வேட்டையன் திரைப்படம்:
ரஜினி கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. மறுபுறம் த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில், ஒடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பாராட்டுக்குகளை குவித்தது. இப்படி இரண்டு பெரும் வெற்றிகளை தந்த ரஜினி மற்றும் ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் வேட்டையன். நாளை வெளியாக உள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மேலும் ஒரு சிறப்பம்சமாக கருதப்படுவது, இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் இணைந்து இருப்பதே ஆகும்.
அமிதாப், ரஜினி எனும் சகாப்தங்கள்:
அமிதாப் பச்சன் பாலிவுட்டை ஆளும் அதேநேரத்தில், ரஜினிகாந்த் கோலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்கிறார். இந்தியத் திரையுலகின் இரு ஜாம்பவான்களான இவர்கள் இன்றளவும் ரசிகர்களை திரைப்படங்கள் வழியாக மகிழ்ச்சியுற செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் சுமார் 3 தசாபதங்களுக்குப் பிறகு, அமிதாப் பச்சன் மற்றும் ரஜினி இருவரும் வேட்டையன் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
32 ஆண்டுக்ளுக்கு பிறகான கூட்டணி:
இந்திய சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த், முன்னதாக ஹம், அந்த கானூன் மற்றும் ஜெராஃப்தார் போன்ற வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதைதொடர்ந்து சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் இனைந்து வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர். டிரெய்லரின் அடிப்படையில் ரஜினியின் என்கவுண்டர் கொள்கைகளுக்கு எதிரானவராக, வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இந்த கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்தியா மட்டுமின்றி, வெளுநாடுகளிலும் வேட்டையன் திரைப்படட்த்திற்கான முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ எப்படி?
ஹம் திரைப்படம் ஹிட்டா?
தமிழில் ஆல்-டைம் பிளாக் பஸ்டரான ரஜினியின் பாட்ஷா திரைப்படம் ஹம் திரைப்படத்தின் தழுவல் தான் என்பதை முதலில் நினைவுகூற வேண்டும். இந்தியில் அமிதாப் பச்சன் டைகர் என்ற கதாபாத்திரத்திலும், ரஜினி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் நடித்து, 1991ம் ஆண்டு வெளியான ஹம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
அந்த கானூன் படம் எப்படி?
சட்டம் ஒரு இருட்டறை என்ற ரஜினி படத்தின் இந்தி ரீமேக் தான் அந்த கானூன். இந்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, 1983ம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் 5வது டத்தை பிடித்தது. இதில் அமிதாப் பச்சன் எக்ஸ்டெண்டட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஜெராஃப்தாரில் ரஜினி கேமியோ:
ஜெராஃப்தார் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதேநேரம், அமிதாப் பச்சனின் நண்பராக, ஒரு சிறிய கேமியோ ரோலில் ரஜினி இப்படத்தில் நடித்து இருந்தார்.