நாக சைதன்யா ஷோபிதா திருமணம்
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் முதலாக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பரவலாக ஷேர் செய்யப்பட்டன. சமீபத்தில் நாக சைதன்யா திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்படி வரும் டிசம்பர் 4 ஆம் தேதி இந்த ஜோடிக்கு தங்கள் குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமணம் நடக்கு இடம்
ஹைதராபாதில் உள்ள பழமையான அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. நாகசைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹைதராபாதில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் உருவானவை. இவரைத் தொடர்ந்து நடிகர் நாகர்ஜூனா மற்றும் நாக சைதன்யா என அவரது குடும்பத்தினருக்கும் இந்த ஸ்டுடியோவுக்கு மிக நெருக்கமான பந்தம் இருந்து வருகிறது. தனது தாத்தாவின் நினைவாகவும் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறும் விதமாகவும் தங்களது திருமணத்தை அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் செய்துகொள்ள நாகசைதன்யா ஷோபிதா தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
நாகசைதன்யா திருமணத்தில் கலந்துகொள்ளும் பிரபலங்கள்
நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் ஒரு சில திரை பிரபலங்கள் மத்தியில் இந்த திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் முதல் டோலிவுட் வரை உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் , ஆமீர் கான் , நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ராஜமெளலியும் இந்த திருமணத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மொத்தம் 8 மணி நேரத்திற்கு இந்த திருமண சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணத்தை படம்பிடித்து ஓடிடியில் வெளியிடும் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றுள்ளது. நயன்தாராவிற்கு பின் இரண்டாவதாக நாக சைதன்யா ஷோபிதாவின் திருமணம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க : Watch Video : டிவியில் அம்மாவைப் பார்த்ததும் செம குஷி...விக்னேஷ் சிவன் பகிர்ந்த க்யூட் வீடியோ
Devi Sri Prasad : குறை சொல்லிட்டே இருக்காங்க... குட் பேட் அக்லி தயாரிப்பாளரை தாக்கிய டி.எஸ்.பி