லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் , இவானா , யோகி பாபு , ராதிகா சரத்குமார் , சத்யராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்தது. இன்றைத் தலைமுறை காதலர்களை கவரும் வகையில் எடுக்கப் பட்ட இந்தப் படம் வெறும் 5 கோடியில் எடுக்கப் பட்டது. ஆனால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு கிடைத்த அபரிமிதமான வரவேறு படத்திற்கு 90 முதல் 100 கோடி வரை வசூலை வாரித் தந்தது. நவீன தலைமுறையைச் சேர்ந்த இருவர் காதலிக்கையில் அவர்களின் செல்ஃபோனை வெறும் ஒரே ஒரு நாளைக்கு மாற்றிக் கொள்வதால் என்ன மாதிரியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியது லவ் டுடே. தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் உருவாக இருக்கிறது.
ஆமீர் கான் மகனுடன் இணையும் ஸ்ரீதேவியின் மகள்
லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தப் பட்டது. ஃபாண்டம் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது . ஆமீர் கான் நடித்த லால் சிங் சட்டா படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஆமீர் கானின் மூத்த மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கும் நிலையில் நாயகியாக நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டு வெளியான ஆர்ச்சீஸ் தொடரில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் குஷி கபூர் ஆனான் இந்த தொடர் பெரியளவில் கவனம் பெறவில்லை. இப்படியான நிலையில் அடுத்த இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் லவ் டுடே ரீமேக். அதே நேரம் ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் மகாராஜ் என்கிற ஓடிடி தொடரில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கியுள்ளது.