புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் மற்றும் அவரது மனைவியான ஆம்பர் ஹெர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த புகழ்பெற்ற வழக்கை நாம் அனைவரும் அறிந்த செய்தி தான். இந்த வழக்கில் தோற்ற ஆம்பர் ஹெர்ட் ஹாலிவுட்டை விட்டு வெளியேறி தனது மகள் ஊனாக் உடன் ஸ்பெய்னிற்கு குடிபெயர்ந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜேக் ஸ்பாரோவின் முன்னாள் மனைவி:
கடந்த ஆண்டு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வழக்கு என்றால் அது ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மற்றும் அவருக்கு மனைவி ஆமபர் ஹெர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த வழக்குதான். ஒரு திரைப்படத்தில் வரும் அடுத்த அடுத்த சுவாரஸ்யங்கள் போல் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வந்து அனைவரையும் திகைக்க வைத்தன.
கிட்டதட்ட ஒரு மாத காலம் நடந்த இந்த வழக்கில் இறுதியாக ஆம்பர் ஹெர்ட்டிற்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. தனது கணவர் ஜானி டெப்பின் மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்ததற்காகவும் பொய் வழக்கு தொடுத்ததற்காகவும் நீதிமன்றம் அவருக்கு 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அபராதம் விதித்தது. இந்த வழக்கிற்குபின் ஜானி டெப்பின் ரசிகர்களால் ஆம்பர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் ஹாலிவுட்டில் அவருக்கான இடம் நிச்சயமற்று இருந்தது.
இந்த நிலையில் ஆம்பர் ஹர்ட் கலிஃபோர்னியாவில் இருந்த தனது வீட்டை 1.1 மில்லியன் டாலருக்கு விற்று விட்டு ஹாலிவுட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆம்பர் தனது இரண்டு வயது மகளான ஊனாகுடன் ஸ்பெய்னிற்கு குடிபெயர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் அவருக்கு நெருக்கமான சிலர் இதுதொடர்பாக கூறும்போது, ஆம்பர் ஹாலிவுட்டை விட்டு விலகிக்கொண்டு தனது மகளுடன் ஸ்பெய்னிற்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் விரைவில் திரும்பி வரும் நோக்கத்தோடு செல்லவில்லை என்பதை மட்டும் நான் அறிவேன். சரியான நேரம் அவருக்கான சரியான வேலை வரும்போது அவர் மறுபடியிம் ஹாலிவுடிற்குத் திரும்பலாம் என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்:
ஜானி டெப் பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன் திரைப்படத்தின் மூலமாக உலகப் புகழ்பெற்ற நடிகரானார்.இவரும் ஹாலிவுட் நடிகையுமான ஆம்பர் ஹெர்டும் திருமணம் செய்துகொண்டார்கள்.இவர்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வந்த நிலையில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக தனது கணவரின் மேல் வழக்கு தொடுத்தார் ஆம்பர் ஹர்ட். இதன் காரணமாக ஹாலிவுட்டில் ஏழு ஆண்டுகள் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஜானி டெப்பிற்கு தடை விதித்தனர். கடந்த 2022 ஆம் ஆண் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு ஆம்பர் தனது கணவரைப் பற்றி தெரிவித்ததெல்லாம் பொய் என்று நிரூபனமானது.இந்த வழக்கிற்கு பின் ஆம்பர் ஹெர்ட் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.