ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரான க்ரிஸ்டோஃப்ர் நோலன்  தற்போது  அனு ஆயுதத்தைக் முதல் முதலில்  கண்டுபிடித்தவரான ஒப்பன்ஹேய்மரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஓப்பன்ஹெய்மராக சிலியன் மர்ஃபி நடித்து வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் சிலியன் மர்ஃபி முதல் முறையாக பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.


நோலன் இயக்கி வரும் ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடித்து வரும் சிலியன் மர்ஃபி  அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் தனக்கும் இயக்குனர் நோலனுக்கும் இடையிலான உறவு, தற்போது அவர்  நடித்து வரும் படத்தைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார் அவர்.


 நோலன் இயக்கிய பேட்மேன் மூன்று பாகங்களில், இன்செப்ஷன், டன்கிர்க் ஆகியப் படங்களில் நடித்துள்ளார் சிலியன் மர்ஃபி. நோலனின் படங்களில்  நடிப்பதற்கு தான் எப்போதும் ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். ’நான் இதை பொதுவிலும் அதே நேரத்தில் க்ரிஸிடம் தனிப்பட்ட முறையிலும் பலமுறை கூறியிருக்கிறேன். எனக்கு நேரம் இருக்கிறதென்றால் அவர் படங்களில் என்னை எப்போது நடிக்க அழைத்தாலும் நான் வருவேன் என்று. எவ்வளவு சின்னக் கதாபாத்திரம் என்றாலும் அதைப் பற்றி தான் கவலைப் பட்டத்தில்லை என அவர் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் நோலனின் ஒரு படத்திலாவது முக்கியக் கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனக்கு இருந்து வந்ததாக கூறினார். ஒரு நாள் திடீரென்று நோலன் தன்னை செல்ஃபோனில் அழைத்ததாகவும் தான் ஒரு படத்திற்கான கதையை எழுதிமுடித்துவிட்டதாக நோலன் தெரிவித்தார்.


மேலும் அதில் தன்னை நடிக்குமாறு  கேட்டுக்கொண்டார் என சிலிய தெரிவித்தார். ’ஒரு பெரியப் பொறுப்பை எடுத்துக்கொள்வதற்கு இதுவே மிகச் சரியான நேரமாக எனக்குத் தோன்றியது அதனால் நான் உடனே சம்மதித்தேன். அது ஒரு மகிழ்ச்சியான நாள். ’மேலும் இந்த படத்திற்கு தயாராகும்போது அணுகுண்டு செயல்படுவது குறித்த நிறைய வகுப்புகள் எடுக்கப் பட்டன. ஆனால் தான் அவற்றைத் தவிர்த்துவிட்டு தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதாக சிலியன் தெரிவித்தார். தான் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரமாகவும் அதே நேரத்தில் மிகவும் புக்ழ்பெற்ற ஒரு கதாபாத்திரம் என்பதால் அதில் நடிப்பது தனக்கு மிக சுவாரஸ்யமான ஒரு அனுபவமாக இருந்ததாக அவர் மேலும்  தெரிவித்தார். இந்தப் படம் திரைக்கு வரும்போது மிக சுவாரஸ்யமான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கும் என கூறினார் சிலியன் மர்ஃபி


சிலியன் மர்ஃபி தமிழ் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானது நெட்பிளிக்ஸில் வெளிவந்த பீகி பிளைண்டர்ஸ் தொடரின் மூலம். இந்தத் தொடரில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப் பட்டது.