விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே  திருமணமான ஒருவருடத்தில் அவர்களுக்கு அய்லா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து ராஜா ராணி சீசன் 2-இலும் நடித்து வரும் ஆல்யா தான் மீண்டும் இரண்டாவதாக கருவுற்று இருப்பதை அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார். 


 






இதையடுத்து அவரது ரசிகர்கள் இரண்டாவது குழந்தை காரணமாக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகப் போகிறீர்களா எனக் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் முதல் குழந்தை சிசேரியனில் பிறந்ததால் இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரியாகப் பெற்றெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.   


இதற்கிடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் உரையாடிய அவர்,  எந்த சீரியலில் இருந்தும் நான் விலகவில்லை சந்தியா என்பது ஒருவர் மட்டுமே. அது நான் மட்டும்தான் என்று தெரிவித்தார்.


அந்த உரையாடலில் இன்னொரு ரசிகர் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆல்யா, ஆண் குழந்தை பிறந்தால், அர்ஷ் என்றும் பெண் குழந்தை பிறந்தால் லைலா என்றும் பெயர் வைப்பேன் என்றார்.


 



முன்னதாக தனது யூட்யூப் சேனலில் வளைகாப்பு நடந்த வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Oviya leave BB Ultimate: கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிக்பாஸில் இருந்து விலகிய ஓவியா?! இதுதான் காரணமாம்!