ராதே ஷ்யாம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் நடிகர் பிரபாஸின் ரசிகர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபாஸின் தீவிர ரசிகரான ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ரவி தேஜா தற்கொலை செய்துகொண்டார்.  ராதே ஷியாம் படத்தால் ஏமாற்றமடைந்த அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


சமீபத்தில் வெளியான நடிகர் பிரபாஸின் திரைப்படம் ராதே ஷியாம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், ரவி தேஜா வருத்தமடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள திலக் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது ரசிகர் தற்கொலை செய்து கொண்டதற்கு பிரபாஸ் இதுவரை பதில் அளிக்கவில்லை.


பிரபாஸின் ரசிகர் தற்கொலை 


ராதே ஷ்யாம் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இறுதியாக கடந்த மார்ச் 11ஆம் தேதி  திரைக்கு வந்தது. திரையரங்குகளில் குவிந்த பிரபாஸின் ரசிகர்கள், இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே கட்-அவுட்கள் அமைத்து அந்த தினத்தை கொண்டாடினார்கள்.


ஆனால், கர்னூலைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி ரவி தேஜா என்ற 24 வயது ரசிகர் ராதே ஷியாமைப் பார்த்து ஏமாற்றமடைந்தார். படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற பிறகு, அவர் தனது வாழ்க்கையை முடிக்க முடிவு செய்தார். படம் தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று உணர்ந்ததால், அவர் தனது தாய் மற்றும் நண்பர்களுடன் புலம்பியுள்ளார். பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். ரவி தேஜாவின் மறைவு பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராதே ஷ்யாம் பற்றி


ராதா கிருஷ்ணா குமார் இயக்கிய காதல் கதை ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாகவும், பூஜா ஹெக்டே டாக்டர் பிரேரனாவாகவும் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ராதே ஷ்யாம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் பிரமாண்டத்தை அனைவரும் பாராட்டினாலும், கதை, திரைக்கதை வலுவாக இல்லை என்று பலர் விமர்சித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண