சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. பிரசவத்திற்காக அவர் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகினார். இது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. இதனையடுத்து, ஆல்யா மானசா கதாபாத்திரத்தில் புதிதாக நடிக்க வந்தவரை, அந்த கதாபாத்திரமாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள பல நாட்கள் எடுத்தன. அந்த அளவிற்கு ஆல்யா மானசா மீது, ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு.



விலகிய காரணம் :


நடிகை ஆல்யா மானசா ‘ராஜா ராணி’  சீரியலில், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்தார். இந்தக்காதல் திருமணத்தில் முடிந்தது. அந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகையான ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' சீரியலிலும் சந்தியா எனும் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்து வந்தார். ஏற்கனவே ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' சீரியலில் தொடர முடியாத காரணத்தால் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சந்தியா கதாபாத்திரத்தில் தற்போது ரியா விஸ்வநாத் நடித்து வருகிறார். 


சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ் :


சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வது வழக்கம். சீரியலில் இருந்து விலகினாலும் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் டச்சில் இருந்தார் ஆல்யா மானசா. இந்த நிலையில் ஆல்யா மானசா மீண்டும் சன் டிவியின் புதிய சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். அதற்கான ப்ரோமோ வெளியாகி டிவி ரசிகர்களை சந்தோஷத்தில் துள்ள வைத்துள்ளது. 


 






 


புதிய சீரியல் ப்ரோமோ:


சன் டிவியில் புதிதாக 'இனியா' எனும் சீரியல் தொடங்கவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆல்யா மானசா நடிக்கிறார். அந்த சீரியலுக்கான ப்ரோமோ  தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. குழந்தைகளுடன் குழந்தையாக ஆல்யா மானசா செய்யும் கலாட்டா ப்ரோமோவாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் ஆல்யா மானசா ரீ என்ட்ரி கொடுப்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் அவரின் ரசிகர்கள்.