தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்,  நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகர்களே எளிதாக மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வரிசையில் மக்கள் மனதில் மிக எளிதாக இடம் பிடித்தவர்கள் ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதி.

 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இவர் அதே தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவியை கடந்த 2019-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதி, தங்களது அன்றாட பணி குறித்தும், சூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளனர். தற்போது ஆல்யா மானசா, ராஜா ராணி தொடரிலும், சஞ்சீவ் கயல் தொடரிலும் பிஸியாக நடித்து வருகின்றனர். 

 





 

நடிகர் சஞ்சீவ் கடந்த  2019-ஆம் ஆண்டு   பென்ஸ் காரை வாங்கினார். இதனையடுத்து தனது மகள் முதல் பிறந்த நாளன்று மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்நிலையில் தற்போது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி கியா கார்னிவல் காரை வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 40 லட்சம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த காரில் சுமார் 7 பேர் வரை அமரக்கூடிய வசதி உள்ளதால்தான் அவர் இதை வாங்கி இருப்பார் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. கார்கள் மீது அதிக கிரேஸ் கொண்ட சஞ்சீவ்-  ஆல்யா மனசா ஜோடி இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

 

இதுகுறித்து ஆல்யா மானசா வெளியிட்டுள்ள பதிவில், "புதிய பீஸ்ட் எங்கள் குடும்பத்தில் இணைந்துவிட்டது. பாப்புவின் கார் கலெக்ஷனில் புதிதாக ஒன்று இணைந்து விட்டது" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அதில் பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த பதிவைக் கண்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.