புஷ்பா படத்தில் கடுமையாக உழைத்த படக்குழுவினர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளனர். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு இந்த ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறையின் பொழுது படம் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை கொடுத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியான முதல் பாக படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. மேலும் படிக்க: கண்டிப்பா தாறுமாறு ஹிட்தான்.. பார்ட் 2-தான் லேட்டாகும் - இது புஷ்பா அப்டேட்!
இந்த நிலையில், புஷ்பா படத்திற்காக கடுமையாக உழைத்த படக்குழுவின் முக்கியமான 40 உறுப்பினர்களுக்கு தலா 11.66 கிராம் மதிப்புள்ள தங்க நாணயத்தை அல்லு அர்ஜூன் வழங்கியுள்ளார். அத்துடன், அனைத்து தயாரிப்பு ஊழியர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் ரொக்க பரிசாக கொடுத்துள்ளார்.
புஷ்பா திரைப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும் மரம் கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: 20 மணி நேரம் ஷூட்டிங்... தூக்கம்கூட இல்லை.. பரபரக்கும் அல்லு அர்ஜூன்.. புஷ்பா அப்டேட்!
முன்னதாக, சமீபத்தில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை அல்லு அர்ஜூன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்